ஓம் வியாசமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் எண்ணிலா கோடிசித்தரிஷி முனிவர்கள் திருவடிகள் போற்றி போற்றி
ஓம் சற்குரு கருவூரார் தேவாய நமக (9 முறை சொல்லவும்)
ஜோதி வழிபாடு
ஜோதி ஜோதி ஜோதி சுயம்
ஜோதி ஜோதி ஜோதி பரம்
ஜோதி ஜோதி ஜோதி அருள்
ஜோதி ஜோதி ஜோதி சிவம்
வாமஜோதி சோமஜோதி வானஜோதி ஞானஜோதீ
மாகஜோதி யோகஜோதி வாதஜோதி நாதஜோதீ
ஏமஜோதி வியோமஜோதி யேறுஜோதி வீறுஜோதி
ஏகஜோதி யேகஜோதீ யேகஜோதி யேகஜோதீ
ஆதிநீதி வேதனே ஆடல்நீடூ பாதனே
வாதிஞான போதனே வாழ்க ! வாழ்க ! நாதனே
- இராமலிங்க சுவாமிகள்
வாழ்கவே வாழ்க என் நந்தித்திருவடி
வாழ்கவே வாழ்கமல மறுத்தான்பதம்
வாழ்கவே வாழ்கமைய்ஞ் ஞானத்தவன்தான்
வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே.
ஸ்ரீ முருகன் சன்னிதி
ஏறுமயில் ஏறிவிளையாடும் முகம் ஒன்றே
ஈசருடன் ஞானமாழி பேசுமுகம் ஒன்றே
கூறுமடி யார்கள்வினை தீர்க்கும்முகம் ஒன்றே
மாறுபடு கரரை வதைத்தமுகம் ஒன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுகம் ஒன்றே
ஆறுமுகமான பொருள் நீ அருளல் வேண்டும்
ஆதியருணாசலம் அமர்ந்த பெருமானே
-அருணகிரிநாதர்
அஞ்சன வேல்விழி மடமாதர்
அங்கவர் மாயையில் அலைவேனோ
விஞ்சுறு மாவுனது அடிசேர
விம்பம் தாயருள் அருளாயோ
நஞ்ச தாவுணும் அரனார்தம்
நன்குமரா வுமை அருள்பாலா
தஞ்சென வாமடி யவர்வாழ
தஞ்சையில் மேவிய பெருமாளே!
நெஞ்சக் கனக்ல்லு நெகிழந் துருகத்
தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்
செஞ்சொற் புனைமாலை சிறந்திடவே
பஞ்சக் கரவா னைபதம் பணிவாம்