ஆடும் பரிவேல் அணிசே வலெனப்
பாடும் பணியே பணியா யருள்வாய்
தேடுங் கயமா முகனைச் செருவிற்
சாடுந் தனியா னைசகோ தரனே.
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!
-அனுபூதி
திருப்பரங்கிரி தீரனுக்கு அரோகரா!
திருச்செந்தில் வேலனுக்கு அரோகரா!
பழனி பால தண்டாயுதபாணிக்கு அரோகரா!
திருவேரகச் செல்வனுக்கு அரோகரா !
குன்றுதோறாடும் குமரனுக்கு அரோகரா !
பழமுதீர்ச்சோலை கிழவோனுக்கு அரோகரா !
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !
தஞ்சை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
ஸ்ரீ சண்டீஸ்வரர் சன்னிதி
பொன்னங் கடுக்கை முடிவேய்ந்த
புனிதற் கமைக்கும் பொருளன்றி
மின்னுங் கலனா டைகள்பிறவும்
வேறு தமக்கென் றமையாமே
மன்னுந் தலைவன் பூசனையின்
மல்கும் பயனை யடியார்கள்
துன்னும் படிபூசனைகொள்ளும்
தூயோ னடித்தாமரை தொழுவாம்.
பொன் போன்ற கொன்றை மாலை தலையில் அணிந்த புனிதமானவருக்கு பொருள் மட்டுமன்றி
மிளிர்கின்ற ஆடைகளையும் பிறவும் தமக்கு என்று இல்லாமல் இறைவனை பூசிக்கும் அடியார்களுக்கு பயன்
படும்படி வழங்கிய உன்னுடைய தூய மலர் அடிகளைத் துதித்து வணங்குகின்றோம்.
ஸ்ரீ அம்மன் சன்னிதி - பஞ்சபுராணம்
புலனைந்தும் பொறி கலங்கி நெறி மயங்கி யறிவழிந்திட்டு ஐமேலுந்தி
அலமந்த போதாக அஞ்சேலென் றருள்செய்வான் அமருங் கோயில்
வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதீர மலையென் றஞ்சி
சிமைந்தி யமைந்து மரமேறி முகில்பார்க்குந் திருவையாறே!
தெளிவுரை : ஐம்புலன்களும் தமது இயல்பிலிந்து திரிந்து, தனது வழியிலிருந்து மயங்கி அதற்குரிய அறிவும்
கெட்டு. பித்த. வாயு. சிலேத்தும் நாளங்களின் மாறுபாட்டால் கபம் பருக வருந்தும்போது, கோயில்.
திருக்கோயிலை வலம் வரும் பெண்கள் நடனம் ஆட. முழவின் அதிர்ஒலி கேட்ட சில மந்திகள் தடுமாற்றம்
கொண்டு மேகத்தின் இடியோசை எனக்கருதி. மரத்தில் ஏறி வானத்தைப் பார்க்கும் திருவையாறு ஆகும்.
அன்றே யென்ற னாவியு முடலும் உடைமை யயல்லாமுங்
குன்றே யனையா ௮யன்னையாட் கொண்டபோதே கொண்டிலையோ
இன்றோர் இடையூறு எனக்குண்டோ? எண்தோள் முக்கண் எம்மானே!
நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே.