மாமன்னர் சிவபாதசேகரன் ராஜராஜ சோழன் மதிநுட்பம், ஆட்சிமுறை
சிவத்தின் மேல் உள்ள பற்றினால் அவருக்காகக் கட்டிய கோயிலும் அதன் கலை நுட்பமும், நால்வர் தேவார திருவாசகத்தை மீட்டெடுத்து மறுபதிவேடு செய்து நமக்கு வழங்கியது.
குடவோலை தேர்தல் மூலம் ஜனநாயகம் கடமை ஆற்றி எல்லோருக்கும் முன்னோடியாக இருந்தது.
கடல் கடந்து இந்தோனேசியா, கம்போடியா மற்றும் இலங்கை நாட்டின் மீது போர் செய்து தமிழன் வெற்றிக் கொடியை நாட்டியது அங்கு நம் கலாச்சாரத்தின் அடையாளமாக சிவாலயத்தை கட்டினார்.
கடல் கடந்து ஆசியா முழுவதும் பண்டமாற்றும் வியாபாரமும். பூம்புகாரில் துறைமுகம் அமைத்து புவிசார் குறியீடாக நாச்சியார்கோயிலை தேர்ந்தெடுத்து அதன் சுற்றுப்புறத்தில் உள்ள ஆற்று மணலை எடுத்து அதிலிருந்து திருவிளக்கு குடம் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்தார்.
மாமன்னன் இராஜராஜ சோழன் மக்களுக்காக பெருவுடையார் வங்கி என்று நடத்தினார்.
பெருவுடையாரின் சிறப்பு
தமிழ் உயிர் எழுத்துக்கள் - 12
தமிழ் மெய் எழுத்துக்கள் - 18
தமிழ் உயிர்மெய் எழுத்துக்கள் - 12 × 18 = 216
கோபுர விமானத்தின் உயரம் - 216 அடி
(2+1+6 = 9) இது நவகிரகத்தைக் குறிக்கிறது.
பெருவுடையாரின் (விமானம்) மேல் பகுதி - 12 அடி
பெருவுடையாரின் (விமானம்) அடிப் பகுதி - 18 அடி
12 × 18 = 216
ஆவுடையார் சுற்றளவு - 54 அடி
(5+4 = 9) இது நவகிரகத்தைக் குறிக்கிறது.