முன்னுரை
இக்காலத்தில் தமிழ்நாட்டில் சிலபேர் ராஜராஜ சோழனின் வரலாற்றை சினிமாவாக எடுத்து பலநூறு கோடி சம்பாதித்து விட்டு இத்திருக்கோவிலுக்கோ அவர் விரும்பிய சைவ சமய வளர்ச்சிக்கோ சைவ சமய போதித்தலுக்கோ பயன்படாமல் அவர்களே தனிப்பட்ட முறையில் அவரை பயன்படுத்திவிட்டனர்.
நாட்டின் தலைவன் எப்படியோ மக்கள் அப்படியே. இதற்கு எடுத்துக்காட்டாக இப்பொழுது நமது நாட்டின் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் நம் பேரரசன் சிவபாதசேகர மாமன்னன் இராஜராஜசோழன் மைந்தன் ராஜேந்திர சோழன் கட்டிய கங்கை கொண்ட சோழபுரத்தில் வந்து விஜயம் செய்து பெருவுடையாரிடம் பாரம்பரிய முறைப்படி பணிந்து வணங்கினர். இதை இத்தலைமுறை பார்க்கும்பொழுது நாமும் சைவ சமயத்தின் பெருவுடையாரை வணங்க வேண்டும் என்ற உந்துதலை கொடுத்தது.
நமது முன்னாள் முதலமைச்சர் டாக்டர். மு. கலைஞர் கருணாநிதி அவர்கள் நம் தாய்மொழியின் பற்றின் காரணமாக பூஜைகளும், மந்திரங்களும் கோவிலில் தமிழிலே செய்ய வேண்டும் என்று சட்டம் ஏற்றினார்.
தற்பொழுது நம் இளைய தலைமுறையின் அரசியல் தலைவன் அண்ணன் சீமான் அவர்கள் தமிழிலே வழிபாடும், பெருவுடையார் கோயில் கும்பாபிஷேகம் செய்வதற்கு சட்டப் போராட்டம் நடத்தி தீர்ப்பு வாங்கினார். தமிழ் வழிபாடு, கும்பாபிஷேகம் நம் தமிழ் கடவுள் முருகனுக்கு காவடி தூக்கி வழிபாடு செய்து நம் தலைமுறையை தமிழ் வழிபாட்டிற்கு கொண்டு வர ஆர்வம் ஊட்டினர்.
உலக சைவ சமயம் மாநாடு நடத்தி சைவ சமயத்திற்கு போற்றுதலை கொடுத்த டாக்டர். பாரிவேந்தர் உடையார் அவர்கள். தனது கல்லூரியில் சைவ சமய பயிற்சி வகுப்பு இலவசமாக அடியார்கள் பயன் அடைய உதவி செய்கிறார். ஆகவே நம் அரசியலிலும், சமுதாயத்திலும், கலாசாரத்திலும் உள்ள தலைவர்கள் சைவ சமயத்தையே தழுவுகிறார்கள் என்பதற்கு முன் உதாரணம்.
தலைவர்கள் வழியே நானும் என் அப்பன் ஈசனை, பெருவுடையாரும், பெருவுடையார் கோவிலில் உள்ள மஹா வராஹி, விநாயகர், மஹா பைரவர், நால்வர்கள், நந்திஎம்பெருமான், சிவபாதசேகரன் மாமன்னன் ராஜராஜசோழன் இவர்களை வழிபாடு செய்து உணர்ந்து இப்பிறவி பற்றுதல் மாயை, சொந்தங்கள் உறவுகள் ஆசை, பொருள் ஆசை, மண், பெண், பொன், மது, கட்ட குணம் இவற்றில் எல்லாம் பற்றுதலிலும் பற்றற்று பற்றுதலாக வாழ்வதற்கு என் சிந்தையில் நின்று அணுவுக்கு அணுவாய் எனக்குள் இருந்து என்னை வழிகாட்டி அழைத்துச் சென்ற என் அப்பன் பெருவுடையாரை உணர்ந்த மற்றவர்களும், அடியார்களும், பொதுமக்களும் உணர்ந்து தங்கள் வாழ்க்கைப் பயனுள்ளதாக பயன்படுத்துவதற்கு நான் உணர்ந்த சிவத்தை - இங்கு சிவதானமாக, ஆன்ம தானமாக உணர்ந்து இப்புத்தகத்தை சமர்ப்பிக்கிறேன்.
இங்ஙனம்