முன்னுரை
நான் செய்யும் செயல் எல்லாவற்றிலும் எனக்குள் நீயே இருந்து செய்கிறாய் என்று உணர்ந்தேன். ஆதலால், இந்த பெருவுடையார் வழிபாடு புத்தகத்தை தொகுத்து வெளியிடுவதும், எனக்குள் இருந்து நீ என் சிந்தையிலும், என் சுவாசத்திலும், என் எண்ணங்களிலும் என் செயலிலும் இருந்து நீயே செய்ய வைத்தாய். இந்த வாய்ப்புக்கு கருவியாக உன் மகனாகிய என்னைப் பயன்படுத்திக் கொண்ட வாய்ப்பிற்காக எத்தனை பிறவி உன்னுடன் இருந்து நீ இந்த வாய்ப்பை கொடுத்தாயோ, இந்த புத்தகம் ஆரம்பம் மட்டுமே. இன்னும் சேவை செய்ய காத்திருக்கிறேன். எனக்குள் இருந்து சேவை செய்வாயாக. எத்தனை பிறவி, எத்தனை தாய்தந்தை உற்றார் உறவினர்களை கடந்தேன். இப்பிறவியிலேயே மட்டுமே நீதான் என் அழிவில்லாத நிரந்தர ஆத்மதகப்பன், ஆத்மா அப்பா, அழிவில்லாத தாயும் தந்தையும் நீயே, என் மனைவியும் நீயே, என் காதலியும் நீயே, என் செல்ல மகனும், மகளும் நீயே, என் சுவாசமும் உணர்தலும் உணர்ச்சியும் சிந்தையிலும் செயலிலும் எண்ணங்களிலும் விருப்பு, வெறுப்பு, கோபம், காமம், பசி, தூக்கம், இன்பம், துன்பம் என் உடலிலும் இருக்கும் மாயையும் உள்ளும் வெளியிலும் இருக்கும் பஞ்சபூதங்களும் நீயே, மாயையினால் ஏற்படும் இன்பதுன்பங்கள், பொருள், தங்கம், வைரம், வைடூரியம், மண், பொன், பெண் எல்லாம் நீயே.
நான் வசிக்கும் இந்த பூமியில் உள்ள வெவ்வேறு விதமான எல்லா உயிர்களும் இந்த பூமியை சுற்றி உள்ள சிறு நட்சத்திரங்களும், ராசிகளும், கிரகங்களும், திதிகளும், நேரங்களும், பஞ்சபட்சிகளும் 9 கோள்களும், பிற கோள்களும், சூரியனும், சந்திரனையும் உன் தலையில் சூடி இதற்கான இயக்கங்களுக்கான சக்தியினையும் கொடுத்து, இதுபோல பல பேரண்டங்களாக வைத்திருப்பவனும் இன்னும் சொல்ல முடியாத கண்டும் காண முடியாத விலையுயர்ந்த சொத்துக்கள், விலை உயர்ந்த பொருள்கள் எண்ணற்ற அண்டங்களிலும் வட்டவெளியில் ரகசியமாய் வைத்திருப்பவனே நீயே நீயே பேரண்டத்தின் நாயகனும் தலைவனும் நீயே. உனக்குத் தொண்டனும் நானே, பக்தனும் நானே, உன் அன்பு பிள்ளையும் நானே. உன் அன்பிற்காக உன் பார்வைக்காக தினமும் ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு நிமிடமும் எனக்குள்ளே இருந்து எல்லாம் செய்கிறாய் என்று நம்பி உணர்ந்தவன் நானே.
நானே உன் பிள்ளை. நீயே என் சிவம். நானே என் அப்பனாகிய சிவத்தின் பிள்ளை. சிவனே இந்த அண்டத்திலும் பேரண்டத்திலும் உள்ள எல்லா சொத்துகளும் நீயே, உன் மகனாகிய எனக்குமே சொந்தம்.
என்னைப் போல் உன் பக்தனாகிய மாமன்னர் ராஜராஜசோழன் உனக்காகக் கட்டிய சைவ திருக்கோயில் ஆகிய பெருவுடையார், பெரிய நாயகி திருக்கோவிலில் எத்தனை ஆயிரம் காலம் கடந்தாலும் சைவத்தின் தலைவனாகிய உனக்கு அவர் ஏற்படுத்திய இந்த மஹா பெரிய கோயிலிருந்து எல்லோரும் பிறந்த பிறப்பின் ரகசியம் அறிந்து ஞானம் அடைந்து தனக்குள் ஒவ்வொருவருக்குள் இருக்கும் சிவத்தை உணர்ந்து அன்பே காதலாகி, காமமாகி, எல்லா உயிர்களுக்குள் நீயே இருக்கிறாய் என்பதை உணர்ந்து இப்பிறவிக்கும் தலைவன் நீயே இருக்கிறாய் என்பதை உணர்ந்து சைவத்தின் கோட்பாடாகிய ஜீவகாருண்ய ஒழுக்கம் செய்து உன்னை அடைவதற்கு இத்திருக்கோயில் ஒரு அடையாளமாகவும், வழிகாட்டியாகவும் அமைத்து கொடுத்த உன் அணுவில் இருந்து வந்த உன் இரத்தம் என் சமூகம், என் பாட்டன் சிவபாதசேகரன் மாமன்னன் ராஜராஜ சோழன் உடையார் மீட்டெடுத்த நால்வர் சைவ தமிழை எங்களுக்கு கொடுத்து சென்றார். அவர் வழியில் நானும் அவர் விட்ட கடமையை இப்புத்தகத்தில் இருந்து தொடர்கிறேன்.
ஐயா எல்லாம் உடையவரே பெருவுடையாரே, உன் மக்களுக்காக உன் நிழலாக நானும் சேவை செய்ய சேவகனாக செயலாற்ற காத்திருக்கிறேன் பேரானந்தத்துடன். எனக்கும் எங்களுக்கும் என் பாட்டன் மாமன்னன் ராஜராஜ சோழனுக்கும் குருவாகிய 18 சித்தர்களுள் ஒருவராகிய சித்தர் கருவூர் தேவர் அவர்களும் மஹா வாராஹி அம்மன், மஹா பைரவர், விநாயகர், முருகன், பெரியநாயகி, பெருவுடையார் ஆசியுடன் இப்புத்தகத்தை வெளியிடுகிறேன்.
வெளியில் உருவத்துடன் இருக்கும் சிவத்திடம் பக்தியை கொடு.
அருவமாய் இருக்கும் சிவத்திடம் இருந்து ஞானத்தை எடுத்துக் கொள்.