விளக்கவுரை : நந்தம்பாடி என்னும் திருத்தலத்தில், நான்மறைகளின் தலைவனாகி, முடிவு என்பது இல்லாத குருவாய் விளங்கி அருள்புரிந்தும், மாறுபட்ட வடிவம் மற்றும் இயல்புகள் ஒரு கோடித் தன்மைகளை உடையவனாகி, வெண்மையான நிறம் கொண்ட எருதை வாகனமாகக் கொண்ட சிவபெருமான், இந்த மண்ணுலகத்தைக் காப்பாற்றத்
சொற்பொருள் : நான்மறை - நான்கு வேதங்கள். அவையாவன : 1. ரிக், 2. யஜுர், 3. சாமம், 4. அதர்வணம் என்பன. அந்தமில் - முடிவு இல்லாத. ஆரியன் - குரு. ஏறு - எருது.

கூறுடை மங்கையுந் தானும் வந்தருளிக்

குதிரையைக் கொண்டு குடநா டதன்மிசைச்

சதுர்படச் சாத்தாய்த் தாளழுந் தருளியும்

வேலம் புத்தூர் விட்டே றருளிக்

கோலம் பொலிவு காட்டிய கொள்கையும்

விளக்கவுரை : தன் உடலின் இடப்பக்கத்தை உடைய உமையம்மையாரும் தானுமாக எழுந்தருளி, மேற்கு நாட்டிலிருந்து குதிரைகளை ஓட்டிக் கொண்டு, அழகுபடப் பரிசாரதியாகத் தான் எழுந்தருளியும், திருவேலம்புத்தூர் என்னும் திருத்தலத்தில், இடப வாகனனாய் விளங்கித் தனது திருமேனியின் அழகைக் காட்டிய தன்மையும்,
சொற்பொருள் : கூறுடை மங்கை - சிவபெருமானின் திருவுடலில் இடப்பாகத்தைப் பற்ற உமாதேவியார். குடநாடு - மேற்கு நாடு. பொலிவு - அழகு.

தர்ப்பண மதனிற் சாந்தம் புத்தூர்

விற்பொரு வேடற் கீந்த விளைவும்

மொக்கணி யருளிய முழுத்தழல் மேனி

சொக்கதாகக் காட்டிய தொன்மையும்

அரியயாடு பிரமற் களவறி யாண்ணான்

விளக்கவுரை : சாந்தம்புத்தூர் என்னும் தலத்திலே, வில்லினால் போர் செய்த வேடன் ஒருவனுக்குக் கண்ணாடியில் திருக்காட்சி தந்த பயனும், ஏமாக்கணீச்சுரம் என்னும் தலத்திலே, முழுவதும் நெருப்பெனச் சிவந்த தனது திருவுடலை அழகாகக் காட்டிய பழமையும், திருமால் மற்றும் நான்முகன் - இவ்விருவராலும் கூட அளந்தறிய முடியாத தன்மையும் கொண்டவன் சிவபெருமான்.
சொற்பொருள் : தழல் - நெருப்பு. மேனி - உடல். தொன்மை - பழமை. அரி - திருமால். பிரமன் - நான்முகன். அளவறியாண்ணான் - அளந்தறிய முடியாத தன்மை கொண்டவன்.

நரியைக் குதிரை யாக்கிய நன்மையும்

ஆண்டுகொண் டருள அழகுறு திருவடி

பாண்டியன் தனக்குப் பரிமா விற்று

ஈண்டு கனகம் இசையப் பெறா அது

ஆண்டான் எங்கோன் அருள்வழி யிருப்பத்

விளக்கவுரை : எனக்காக நரிகளை குதிரைகளாகச் செய்தருளியும், தன்னுடைய அழகான திருவடிகளின் மூலம் அன்று ஆட்கொண்டு அருள் செய்ய அரிமர்த்தன பாண்டியன் என்னும் மன்னனிடம் குதிரைகளை விற்று, அவற்றுக்கு ஈடாக மிகுதியான பொன்னை அவன் தந்தபோது, அதனை விரும்பாமல் அவனை அருள்வழியில் செலுத்துவதற்காக ஆண்டு கொண்ட எம் தலைவனாகிய சிவபெருமான்,