விளக்கவுரை : தேவர்களும் தேடிக் காண இயலாத தன்மையுடையவன் சிவபெருமானே என்பதை நீ காண்பாயாக. பெண்ணென்றும் ஆணென்றும் அலியென்றும் கூறப்படும் மூன்று பெருமைகளும் உடையவன் என்பதை நீ காண்பாயாக.
என் இரண்டு கண்களால் நானும் கண்டேன் என்பதை நீ காண்பாயாக. அடியவர்களுக்குத் திருவருளை மிகவும் அதிகமாகப் பொழியும் அமுதமானவனே என்பதை நீ காண்பாயாக. அவனுடைய அருளின் சிறப்பினை யான் கண்டு கொண்டேன் என்பதை நீ காண்பாயாக.
என் இரண்டு கண்களால் நானும் கண்டேன் என்பதை நீ காண்பாயாக. அடியவர்களுக்குத் திருவருளை மிகவும் அதிகமாகப் பொழியும் அமுதமானவனே என்பதை நீ காண்பாயாக. அவனுடைய அருளின் சிறப்பினை யான் கண்டு கொண்டேன் என்பதை நீ காண்பாயாக.
சொற்பொருள் : நனி சுரக்கும் - அதிகமாகப் பொழியும். உரிச்சொல் தொடர்.
புவனியிற் சேவடி தீண்டினன் காண்க
சிவனென யானுந் தேரினன் காண்க
அவனெனை ஆட்கொண்டருளினன் காண்க
குவளைக் கண்ணிக் கூறன் காண்க
அவளுந் தானும் உடனே காண்க
விளக்கவுரை : இவ்வுலகில் தன்னுடைய செம்மையான திருவடிகளைப் பொருந்தச் செய்தவன் என்பதை நீ காண்பாயாக. அத்தன்மை பெற்ற அவனைச் சிவபெருமான்தான் என்று நானும் தெளிந்தேன் என்பதை நீ காண்பாயாக. அந்தச் சிவபெருமான் என்னை ஆட்கொண்டான் என்பதை நீ காண்பாயாக. கருங்குவளை மலர் போன்ற கண்களைக் கொண்டவளாகிய உமாதேவியாரைத் தமது இடப்பாகத்தில், உடலின் சரிபாதியாகக் கொண்டவன் சிவபெருமான் என்பதை நீ காண்பாயாக. அம்மையும் அப்பனுமாக ஒன்றியிருப்பதை நீ காண்பாயாக.
சொற்பொருள் : புவனம் - உலகம். சேவடி - செம்மையான திருவடி. குவளைக் கண்ணி - குவளை மலர் போன்ற கண்களைக் கொண்ட உமாதேவியார்.
பரமா னந்தப் பழங்கட லதுவே
கருமா முகிலில் தோன்றித்
திருவார் பெருந்துறை வரையி லேறித்
திருத்தகு மின்னொளி திசைதீசை விரிய
ஐம்புலப் பந்தனை வாளர விரிய
விளக்கவுரை : பரமானந்தப் பெரும்பழமை வாய்ந்த கடலானது, அவ்வாறு ஒன்றி இருப்பதுவே, அந்தக் கடல்தான் கருநிறப் பெருமேகமாய் எழுச்சி பெற்று, அழகிய திருப்பெருந்துறை மலைமேல் ஏறி, அழகு பொருந்தி மின்னல் ஒளியாகித் திசைகள் அனைத்தும் பரவிட, ஐம்பொறிகளால் உண்டாகிற ஐம்புலன்களின் ஆசைகள் என்னும் ஒளியுடைய பாம்புகள் பயந்து ஓடவும்,
சொற்பொருள் : கருமாமுகில் - கரிய நிறங்கொண்ட மேகம். வரை - மலை. வாளரவு - ஒளிப்பொருந்திய பாம்பு.
வந்துயர்க் கோடை மாத்தலை கரப்ப
நீடழில் தோன்றி வாளொளி மிளிர
எந்தம் பிறவியிற் கோபம் மிகுத்து
மூரசெறிந்து மாப்பெருங் கருணையில் முழங்கிப்
பூப்புரை அஞ்சலி காந்தள் காட்ட
விளக்கவுரை : கோடை வெப்பம், தன்னுடைய பெருந்தலையைக் காட்டாமல் மறைக்கவும், பேரழகு கொண்ட செங்காந்தள் மலர்கள், மிகுந்த ஒளியை மிளிரச் செய்யவும், எங்கள் பிறவிகள் என்னும் இந்திரகோபப் பூச்சிகள் பெருகி, முரசு போல அதிர்ந்து, மிகப்பெரிய அருள் என முழங்கி, தாமரைப் பூவின் குவிந்த தன்மையைப் போன்ற காந்தளின் அரும்புகள் காணப்படவும்,