சொற்பொருள் :
மாத்தலை - பெரிய தலை. உரிச்சொல் தொடர். கரப்ப - மறைக்க. நீடழில் - பேரழகு.
காந்தள் - ஒருவகை மலர்.
எஞ்சா இன்னருள் நுண்துளி கொள்ளச்
செஞ்சுடர் வெள்ளந் திசைதிசை தெவிட்ட வரையுறக்
கேதக் குட்டங் கையற வோங்கி
இருமுச் சமயத் தொருபேய்த் தேரினை
நீர்நசை தரவரு நெடுங்கண் மான்கணம்
விளக்கவுரை :
குறையாத இனிய அருள் என்னும் நுண்ணிய துகள்கள் தோன்ற, செம்மையான பேரொளி
அனைத்துத் திசைகளிலும் மிளிர்ந்திட, மலையென விளங்கும் துன்பக்குளம் முற்றிலும் கரை உடைத்துக்
கழிய, அறுவகைச் சமயங்கள் என்னும் ஒப்பற்ற கானல்நீரை, தாகம் உண்டாகவும் அதனால் நீரை விரும்பி
அதனை நாடி வந்த பெரிய கண்கள் கொண்ட மான்கூட்டம்.
சொற்பொருள் :
எஞ்சா - குறையாத. தெவிட்ட - தோன்ற. பேய்த்தேர் - கானல்நீர்.
நீர்நசை - நீரைக் குடிக்க உண்டாகும் விருப்பம். மான்கணம் - மான்கூட்டம்.
தவப்பெரு வாயிடைப் பருகித் தளர்வாடும்
அவப்பெருந் தாகம் நீங்காதசைந்தன
ஆயிடை வானப் பேரியாற்றகவையின்
பாய்ந்தைம் தின்பப் பருஞ்சுழி கொழித்துச்
சுழித்தும் பந்தமாக் கரைபொரு தலைத் திடித்து
விளக்கவுரை :
தவம் என்னும் பெரிய வாயினைக் கொண்டு உண்டு தளர்ச்சியோடும், பயனற்ற பேரளவு
நீர்வேட்கை நீங்காமல் மிகவும் வருந்தின. அப்பொழுது அவ்விடத்தில் வானப் பேராற்றின் உள்ளே பாய்ந்து
எழுந்து, பேரின்பப் பெருநீர்ச் சுழிகளை ஒதுக்கிச் சுழற்சியை அடைந்து, எம் பற்று என்னும் பெருங்கரையை
முட்டிமோதி அசைத்திடித்து,
சொற்பொருள் :
தளர்வு - தளர்ச்சி. பந்தமாக்கரை - பற்றாகிய பெருங்கரை.
உருவ அருள்நீர் ஓட்டா அருவரைச்
சந்தின் வான்சிறை கட்டி மட்டவிழ்
வெளிமலர்க் குளவாய் கோலி நிறையகில்
விளக்கவுரை :
பல பிறவிகளிலும் ஊழ்வினைகளின் காரணங்களால், வளர்ச்சி பற்ற நல்வினை, தீவினை
ஆகிய பெருமரங்களை வேடுபிடுங்கி எறிந்து, நிறைந்த அருளாகிய வெள்ளத்தைப் பாயச் செய்து,
அரிய மலைகளில் தோன்றி சந்தன மரங்களால் உயர்ந்த அணையைக் கட்டி, தேன் ஒழுகும்
நறுமணம் காண்ட மலர்கள் மிகுந்தனவாய்க் குளங்களுக்குரிய இடங்களை அமைத்து, மணம் மிகுந்த
அகிற்கட்டைகளின்,
சொற்பொருள் :
இருவினை - 1. நல்வினை, 2. தீவினை. சந்து - சந்தன மரம். மட்டு - தேன்.
வெறி - மணம்.
மாப்புகைக் கரைசேர் வண்டுடைக் குளத்தின்
மீக்கொள மேன்மேல் மகிழ்தலில் நோக்கி
அருச்சனை வயலுள் அன்புவித் தீட்டுத்
தொண்ட உழவர் ஆரத் தந்த
அண்டத் தரும்பெறல் மேகன் வாழ்க