உறவினர் எனப்படும் பழமைப் பசுக்கூட்டங்கள், தொடர்ந்து சென்று அழைத்துப் பதறியவராய்ப் பலவகைப் பட்ட நோன்புகளையே மிகவும் மேலானவையாக அந்தணரும்,
சொற்பொருள் : ஆத்தமானார் - நம்பிக்கையுடன் நட்பாக இருந்தவர்கள். நாத்திகம் - இறை மறுப்புக் கொள்கை. சுற்றம் - உறவினர். குழாங்கள் - கூட்டம். வேதியர் - அந்தணர்.
சரத மாகவே சாத்திரங் காட்டினர்
சமய வாதிகள் தத்தம் மதங்களே
அமைவ தாக அரற்றி மலைந்தனர்
மிண்டிய மாயா வாத மென்னும்
சண்ட மாருதஞ் சுழித்தடித் தாஅர்த்து
விளக்கவுரை : உண்மையாகவே கலைகளைப் படைத்தனர். சமயம் கூறும் வாழ்க்கையே உயர்ந்ததென்று வாதம் செய்பவர். தத்தம் சமயங்களே அடுத்த பிறப்பு இல்லாமல் பேரின்பப் பெருவாழ்வளிக்க வல்லவனாகப் பலவாறு சொல்லி, ஒருவரோடு ஒருவர் போரிட்டனர். நெருங்கிய மாயாவாதம் என்னும் பெருங்காற்று சுழன்று வீசி ஆரவாரம் செய்து,
சொற்பொருள் : சரதம் - எமய். மிண்டிய - நெருங்கிய. சண்ட மாருதம் - பெருங்காற்று.
உலோகா யதனெனும் ஒண்டிறற் பாம்பின்
கலாபேதத்த கடுவிடம் எய்தி
அதிற்பெரு மாயை எனைப்பல சூழவும்
தப்பா மேதாம் பிடித்தது சலியாத்
தழலது கண்ட மெழுகது போலத்
விளக்கவுரை : உலோகாயதம் எனப்படும் ஒளிபொருந்திய வலிமை வாய்ந்த பாம்பினுடைய நூல் வேறுபாடு கொண்ட கொடிய விஷத்தை அடைந்து, அதன் காரணமாகப் பெரு மாயைகள் என்னைச் சூழ்ந்து கொள்ளவும், அதற்காக மனதைத் தவற விடாமல், பற்றிக் கொண்ட கடவுள் கொள்கையில் அந்த மனம் வறுப்படையாமல், தீயினைத் தழுவிய மெழுகு போல,
சொற்பொருள் : உலோகாயதம் - உலக வாழ்க்கை. கடுவிடம் - கொடுமையான விஷம். சலியா - வறுப்படையாமல். தழல் - நெருப்பு.
தொழுதுளம் உருகி அழுதுடல் கம்பித்து
ஆடியும் அலறியும் பாடியும் பரவியுங்
கொடிறும் பேதையுங் கொண்டது விடாதெனும்
படியே யாகிநல் லிடையறா அன்பில்
பசுமரத் தாணி அறைந்தாற் போலக்
விளக்கவுரை : வணங்கியும், உள்ளம் உருகியும், உடல் நடுக்கமுற்றுப் பேரின்பப் பெருங் கூத்தாடியும், அரற்றியும், பாடியும், துதித்தும், 'முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா' என்னும் பழமொழிக்கு ஏற்ப விளங்கி, நல்லமுறையாய் இடையில் விட்டு விலகாத அன்பு கொண்டு, பசுமையான மரத்தில் ஆணி அடித்தாற் போன்று,
சொற்பொருள் : தொழுது - வணங்கி. கொடிறு - முதலை. பேதை - மூர்க்கன். அறைதல் - அடித்தல்.