குற்றா லந்தெங் கூத்தா போற்றி

கோகழி மேவிய கோவே போற்றி

ஈங்கோய் மலையெம் எந்தாய் போற்றி

பாங்கார் பழனத் தழகா போற்றி

கடம்பூர் மேவிய விடங்கா போற்றி

விளக்கவுரை : திருக்குற்றாலத்தில் இருந்தவாறு அருள் புரியும் எம்முடைய ஆடல் வல்லானே! வணக்கம். திருவாவடுதுறை என்னும் திருத்தலத்தில் விருப்புடன் அமர்ந்த இறைவா! வணக்கம். திருவீங்கோய் மலையினை உடைய எம் தந்தையே! வணக்கம். அழகான திருப்பழனம் என்னும் திருத்தலத்தில் விளங்குகின்ற அழகானவனே! வணக்கம். திருக்கடம்பூர் என்னும் திருத்தலத்தில் விருப்பமுடன் அமர்ந்த சுயம்பு உருவானவனே! வணக்கம்.
சொற்பொருள் : கோகழி - திருவாவடுதுறை என்னும் திருத்தலம்.

அடைந்தவர்க் கருளும் அப்பா போற்றி

இத்தித் தன்னின் கீழிரு மூவர்க்கு

அத்திக் கருளிய அரசே போற்றி

தென்னாடுடைய சிவனே போற்றி

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

விளக்கவுரை : தன்னை அடைந்தவர்களுக்குத் திருவருள் புரியும் அப்பனே! வணக்கம். கல்லால மரத்தின் கீழ் இருந்து அறுவர்க்கும் யானைக்கும் அருளிய அரசே! வணக்கம். தென்பாண்டிநாட்டினை உடைய சிவபெருமானே! வணக்கம். எந்நாட்டு மக்களுக்கும் தலைவனே! வணக்கம்.
சொற்பொருள் : இத்தி - கல்லால மரம். அத்தி - யானை.

ஏனக் குருளைக் கருளினை போற்றி

மானக் கயிலை மலையாய் போற்றி

அருளிடவேண்டும் அம்மான் போற்றி

இருள்கட அருளும் இறைவா போற்றி

தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி

விளக்கவுரை : பன்றிக் குட்டிக்குப் பாலூட்டி அருள் செய்தவனே! வணக்கம். பெருமைக்குரிய திருக்கயிலை மலையில் வாழ்பவனே! வணக்கம். திருவருள் பொழிய வேண்டும். அழகிய தலைவனே! வணக்கம். அறியாமை என்னும் இருள் அழியுமாறு அருள்புரிந்த இறைவனே! வணக்கம். தாங்குவார் இன்றித் தனியாய்ச் சோர்வடைந்துள்ள அடியேன் உன்னை வணங்குகிறேன். எனக்கு அருள்வாய் இறைவா! வணக்கம்.
சொற்பொருள் : ஏனக்குருளை - பன்றிக்குட்டி. தளர்ந்தேன் - சோர்வடைந்தேன்.

களங்கொளக் கருத அருளாய் போற்றி

அஞ்சேல் என்றிங்கு அருளாய் போற்றி

நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி

அத்தா போற்றி ஐயா போற்றி

நித்தா போற்றி நீமலா போற்றி

விளக்கவுரை : உன்னுடைய இருப்பினைக் கண்டு கொள்ள எண்ணுகின்ற அருள் தருவாய்; வணங்குகிறேன். அஞ்ச வேண்டா என்று இங்கு அருள் தருவாய்; வணங்குகிறேன். விஷத்தையே அமுதமாக எண்ணி விரும்பி உண்டாய் உன்னை வங்குகிறேன். விஷத்தையே அமுதமாக எண்ணி விரும்பி உண்டாய். உன்னை வணகுகிறேன். அப்பனே, தலைவனே உன்னை வணங்குகிறேன். நிலையானவ்னே, தூய்மையுடைவனே உன்னை வணங்குகிறேன்.