பிறப்பிலி நாதனைப் பேர்நந்தி தன்னைச்
சிறப்பொடு வானவர் சென்று கைகூப்பி
மறப்பிலா நெஞ்சினுள் மந்திர மாலை
உறைப்பொடுங் கூடிநின்று ஓதலுமாமே.
சிறப்பொடு வானவர் சென்று கைகூப்பி
மறப்பிலா நெஞ்சினுள் மந்திர மாலை
உறைப்பொடுங் கூடிநின்று ஓதலுமாமே.
பொன்னாற் புரிந்தீட்ட பொற்சடை என்னப்
பின்னால் பிறங்க இருந்தவன் பேர்நந்தி
என்னால் தொழப்படும் எம் இறை மற்றவன்
தன்னால் தொழப்படுவார் இல்லை தானே.
பின்னால் பிறங்க இருந்தவன் பேர்நந்தி
என்னால் தொழப்படும் எம் இறை மற்றவன்
தன்னால் தொழப்படுவார் இல்லை தானே.
பத்தினி பக்தர்கள் தத்துவ ஞானிகள்
சித்தங் கலங்கச் சிதைவுகள் செய்தவர்
அத்தமும் ஆவியும் ஆண்டொன்றில் மாண்டிடும்
சத்தியம் ஈது சதாநந்தி ஆணையே.
சித்தங் கலங்கச் சிதைவுகள் செய்தவர்
அத்தமும் ஆவியும் ஆண்டொன்றில் மாண்டிடும்
சத்தியம் ஈது சதாநந்தி ஆணையே.
திருவடி வைத்தென் சிரத்தருள் நோக்கிப்
பெருவடி வைத்தந்த பேர்நந்தி தன்னைக்
குருவடிவிற் கண்ட கோனை எங்கோவைக்
கருவடி பற்றிடக் கண்டுகொண் டேனே.
பெருவடி வைத்தந்த பேர்நந்தி தன்னைக்
குருவடிவிற் கண்ட கோனை எங்கோவைக்
கருவடி பற்றிடக் கண்டுகொண் டேனே.
வைச்ச கலாதி வரு தத்துவம் கெட
வெச்ச இருமாயை வேறாக வேரறுத்து
உச்ச பரசிவமாம் உண்மை ஒன்றவே
அச்சம் அறுத்தென்னை ஆண்டனன் நந்தியே.
வெச்ச இருமாயை வேறாக வேரறுத்து
உச்ச பரசிவமாம் உண்மை ஒன்றவே
அச்சம் அறுத்தென்னை ஆண்டனன் நந்தியே.
குருவே சிவமெனக் கூறினன் நந்தி
குருவே சிவம் என்பது குறித்து ஓரார்
குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்
குருவே உரை உணர்வு அற்றதோர் கோவே.
குருவே சிவம் என்பது குறித்து ஓரார்
குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்
குருவே உரை உணர்வு அற்றதோர் கோவே.
தேவர் பிரானைத் திசைமுகர் நாதனை
நால்வர்பிரானை நடுவுற்ற நந்தியை
பாவர் பிரான் என்றிறைஞ்சுவார் அவ்வ
ஆவர்பிரான் அடி அண்ணலும் ஆமே.
நால்வர்பிரானை நடுவுற்ற நந்தியை
பாவர் பிரான் என்றிறைஞ்சுவார் அவ்வ
ஆவர்பிரான் அடி அண்ணலும் ஆமே.
வாரா வழிதந்த மாநந்தி பேர்நந்தி
ஆரா அமுதளித்த ஆனந்த பேர்நந்தி
பேராயிரம் உடைப்பெம்மான் பேர் ஒன்றினில்
ஆரா அருட்கடல் ஆடுக என்றானே.
ஆரா அமுதளித்த ஆனந்த பேர்நந்தி
பேராயிரம் உடைப்பெம்மான் பேர் ஒன்றினில்
ஆரா அருட்கடல் ஆடுக என்றானே.
அறிவு வடிவென்று அறியாத என்னை
அறிவு வடிவென்று அருள்செய்தான் நந்தி
அறிவு வடிவென்று அருளால் அறிந்தேன்
அறிவு வடிவன்று அறிந்திருந்தேனே.
அறிவு வடிவென்று அருள்செய்தான் நந்தி
அறிவு வடிவென்று அருளால் அறிந்தேன்
அறிவு வடிவன்று அறிந்திருந்தேனே.
முன்னவனார் கோயில் பூசைகள் முட்டிடின்
மன்னர்க்குத் தீங்குள வாரி வளங்குன்றும்
கன்னங் களவு மிகுத்திடுங் காசினி
என்னரு நந்தீ எடுத்துரைத் தானே.
மன்னர்க்குத் தீங்குள வாரி வளங்குன்றும்
கன்னங் களவு மிகுத்திடுங் காசினி
என்னரு நந்தீ எடுத்துரைத் தானே.
போதந்தரும் எங்கள் புண்ணிய நந்தியைப்
போதந்தனில் வைத்துப் புண்ணியராயினார்
நாதன் நடத்தால் நயனாங் களிகூர
வேதம் துதித்திடப் போயடைந்தார் விண்ணே.
போதந்தனில் வைத்துப் புண்ணியராயினார்
நாதன் நடத்தால் நயனாங் களிகூர
வேதம் துதித்திடப் போயடைந்தார் விண்ணே.
ஆயன நந்தி அடிக்கென் தலைபெற்றேன்
வாயன நந்தியை வாழ்த்த என் வாய்பெற்றேன்
காயன நந்தியைக் காண என் கண்பெற்றேன்
சேயன நந்திக்கென் சிந்தை பெற்றேனே.
வாயன நந்தியை வாழ்த்த என் வாய்பெற்றேன்
காயன நந்தியைக் காண என் கண்பெற்றேன்
சேயன நந்திக்கென் சிந்தை பெற்றேனே.
நந்தியை எந்தையை ஞானத்தலைவனை
மந்திரம் ஒன்றுள் மருவி அதுகடந்து
அந்தர வானத்தின் அப்புரத்து அப்பர
சுந்தரக் கூத்தனை என் சொல்லுமாறே.
மந்திரம் ஒன்றுள் மருவி அதுகடந்து
அந்தர வானத்தின் அப்புரத்து அப்பர
சுந்தரக் கூத்தனை என் சொல்லுமாறே.
ஈசனடியார் இதயங் கலங்கிடத்
தேசமும் நாடும் சிறப்பும் அழிந்தீடும்
வாசவன் பீடமும் மாமன்னர் பீடமும்
நாசமதாயிடும் நம்நந்தி ஆணையே.
தேசமும் நாடும் சிறப்பும் அழிந்தீடும்
வாசவன் பீடமும் மாமன்னர் பீடமும்
நாசமதாயிடும் நம்நந்தி ஆணையே.
நாடும் உறவும் கலந்தெங்கள் நந்தியைத்
தேடுவன் தேடிச் சிவபெருமான் என்று
கூடுவன் கூடிக் குரைகழற்கே செல
வீடுமளவும் விடுகின்றிலேனே.
தேடுவன் தேடிச் சிவபெருமான் என்று
கூடுவன் கூடிக் குரைகழற்கே செல
வீடுமளவும் விடுகின்றிலேனே.
சைவ சமயத் தனிநாயகன் நந்தி
உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு
தெய்வச் சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்துய்ய
வையத்துளார்க்கு வகுத்து வைத்தானே.
உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு
தெய்வச் சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்துய்ய
வையத்துளார்க்கு வகுத்து வைத்தானே.
இதயத்தும் நாட்டத்தும் என்றன் சிரத்தும்
பதிவித்த பாதப் பராபரன் நந்தி
கதிவைத்தவாறும் மெய்காட்டிய வாறும்
விதிவைத்தவாறும் விளம்ப ஒண்ணாதே.
பதிவித்த பாதப் பராபரன் நந்தி
கதிவைத்தவாறும் மெய்காட்டிய வாறும்
விதிவைத்தவாறும் விளம்ப ஒண்ணாதே.
பிறவா நெறிதந்த பேரருளாளன்
மறவா அருள்தந்த மாதவன் நந்தி
அறவாழி அந்தணன் ஆதி பராபரன்
உறவாகி வந்து என் உளம் புகுந்தானே.
மறவா அருள்தந்த மாதவன் நந்தி
அறவாழி அந்தணன் ஆதி பராபரன்
உறவாகி வந்து என் உளம் புகுந்தானே.
அடங்காத என்னை அடக்கி அடிவைத்து
இடங்காண் பரானந்தத்தே என்னை இட்டு
நடந்தான் செயும் நந்தி தன்ஞானக் கூத்தன்
வாழ்கவே வாழ்க என் நந்தி திருவடி.
இடங்காண் பரானந்தத்தே என்னை இட்டு
நடந்தான் செயும் நந்தி தன்ஞானக் கூத்தன்
வாழ்கவே வாழ்க என் நந்தி திருவடி.
வாழ்கவே வாழ்க மலம் அறுத்தான் பதம்
வாழ்கவே வாழ்க மெய் ஞானத்தவன் தாள்
வாழ்கவே வாழ்க மலம் இலான் பாதமே.
வாழ்கவே வாழ்க மெய் ஞானத்தவன் தாள்
வாழ்கவே வாழ்க மலம் இலான் பாதமே.