மேற்கண்ட 30 மந்திரங்களில் 10 (அ) 20 மந்திரங்களை மனனமாக சொல்பவர்களுக்கு 51 (அ) 108 மந்திரங்கள் அடங்கிய திருமந்திரம் சிறிய புத்தகம் பரிசாக வழங்கப்படும்.

திருமந்திர அருட்சபை அறக்கட்டளை திருச்சி சார்பில் இலவச திருமந்திர வகுப்பு ஆன்லைன் மூலம் வாராவாரம் புதன்கிழமை இரவு 7.00-8.00 மணிக்கு மற்றும் நேரடி வகுப்பு பிரதி மாதம் மூன்றாம் சனிக்கிழமை பட்டுக்கோட்டை ராமச்சந்திரா திருமண மண்டபத்தில் நடைபெறும்.

மேலும் விபரங்களுக்கு : போன் / வாட்ஸ் அப் : +91 9894891332 (அ) +91 9442263068

இரட்டை விநாயகர் சன்னிதி
பிடியதன் உருஉமை கொளமிகு கரியது
வடிகொடி தனதடி வழிபடும் அவரிடர்
கடிகண பதீவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே!
சம்பந்தர்
உமையவள் பிடியின் வடிவு கொள்ளச் சிவன் களிற்றின் வடிவம் கொண்டு, தன்னடி வழிபடும் அடியவரின் இடரெல்லாம் ஒடிந்திடக் காவல் புரியும் கணபதி வந்திட வழியமைத்துத் தந்தருளினான்; தடையின்றி அடியவர்க்குக் கொடை வழங்கும் வடிவினரான அச்சிவன்; வாழ்பதி வலிவலமாம்!
சுவாமி சன்னிதி
சிவாய நம ஓம் சிவாய நமஹ!
சிவாய நம ஓம் நமச்சிவாய!!
உண்ணாமுலை உமையாளொடும் உடனாகியயொருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைமுழு வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவா வண்ணம் அறுமே.
தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டி
தூமாமழை துருவன்மிசை சிறுநுண்துளி சிதற
ஆமாம்பிணை அணையும்பொழில் அண்ணாமலை அண்ணல்
பூமாங்கழல் புணைசேவடி நினைவார்வினை யிலரே.
வெம்புந்திய கதிரோனொளி விலகும்விரி சாரல்
அப்புந்திமுயில் எய்தவன் அண்ணாமலை அதனை
கொம்புந்துவ குயிலாலுவ குளிர்காழியுள் ஞான
சம்பந்தன் தமிழ்வல்லவர் அடிபேணுதல் தவமே.
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவவண்மதிகடி
காடுடையசுட லைப்பொடிபூசி லயன் னுள்ளங்கவர் கள்வன்
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவ னன்றே!!
- சம்பந்தர்
கூற்றா யினவாறுவிலக் ககிலீர்
கொடுமை பலசெய்தன நானறியேன்
ஏற்றாயடிக்கே இரவும் பகலும்
பிரியாது வணங்குவனெப் பொழுதும்
தோற்றா தென்வயிற் றினகம் படியே