ஆற்றே னடியே னதிகைக் கெடில
வீரட்டானத் துறையும் மானே.
- அப்பர்
உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான்மலை
திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள்
மழலை முழவு அதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை
வழுவா வண்ணம் அறுமே.
தெளிவுரை : உண்ணாமுலை என்னும் திருநாமம் தாங்கிய உமாதேவியோடு உறைகின்ற ஒப்பற்றவனாகிய ஈசன் அத்தேவியைத் தன் இடப்பாகத்தில் வரித்துப் பண் ஆயினான். அப்பெருமானுடைய மலையாகிய திருவண்ணாமலை செல்வம் மிக்க மணிகளைக் கொண்டுள்ளது. அம்மலையிலிருந்து மண்ணில் பொருந்த வீழும் அருவியானது இளமுழவின் ஓசையைத் தருகின்றது. அத்தகைய அண்ணாமலையைத் தொழுபவர்தம் வினைகள் தவறாமல் அறுந்து வீழும்.
சிறப்புரை : சோதிப் பிழம்பாகிய பெருமான் மலை சோதி வடிவாய் இருத்தலை, திருமாமணி திகழ என்னும் சொல் உணர்த்திற்று. அண்ணாமலை என்பது தேவியின் திருநாமமாகிய உண்ணாமுலை என்று குறித்ததைப் போல, ஈசன் திருநாமத்தைக் குறித்தும் உணர்த்திற்று. அண்ணாமலை, மலையின் திருநாமமும் ஆகும். இதனை, பஞ்சாட்சரத்திற்கு ஐந்தழுத்து மந்திரம் ஒப்பக் கொள்ளலும் உண்டு. வழுவின்றி வினையறுதல் வண்ணம் ஆகும்.
விடுகொம்பொடு தீண்டித்
தூமாமழை துருவன் மிசை
சிறுநுண்துளி சிதற
ஆமாம்பிணை அணையும்பொழில்
அண்ணாமலை அண்ணல்
பூமாங்கழல் புணைசேவடி
நினைவார்வினை இலரே.
தெளிவுரை : உயர்ந்த மாங்கனிகளை ஆண் குரங்கு பறித்துக் கொள்ளவும், அதனால் அசையும் மாங்கொம்புகள் மேகத்தைத் தொட்டு சிறிய நீர்த்துளிகளைச் சிதறும்படி செய்ய பருமையான பசுக்கள் எருதுகளுடன் சாரும் சோலைகளையுடைய அண்ணாமலை அண்ணலின், பூப்போன்று மென்மையாயும் செம்மை தருவனவாயும் திகழும் திருவடியை நினைப்பவர்களுக்கு வினை இல்லை.
விலகும்விரி சாரல்
அம்புந்திமு எயில் எய்தவன்
அண்ணாமலை யதனைக்
கொம்புந்துவ குயில் ஆனுவ
குளிர்காழியுண் ஞான
சம்பந்தன தமிழ்வல்லவர்
அடிபேணுதல் தவமே.