நறுமணம் நிறைந்த உனது திருவடியை நாடுகிற எனக்கு உடல் புளகாங்கிதம் அடைகிறது. உணர்ச்சியின் வேகத்தால் அது நடுநடுங்குகிறது. என் கைகள் இரண்டையும் தலையில் வைத்து உன்னை வணங்குகிறேன். கண்ணீர் பொங்கி வருகிறது. உள்ளத்தில் இளஞ்சூடு தட்டுகிறது. அந்த உள்ளத்தை உனக்கே கோவில் ஆக்கியதால் நிலையற்ற உலக விவகாரங்கள் எல்லாம் அதைவிட்டுப் பறந்து ஓடுகின்றன. நாவால் உன்னைப் போற்றுகின்றேன். உனது திருவருள் விலாசத்திற்கு மேலும் மேலும் வற்றி உண்டாகுக என்று வாழ்த்துகிறேன். ஆதலால் எல்லாவற்றையும் உடையவனே! நீ என்னுடைய நிலையைக் கண்டு, இரங்கி, உன் அடியவர்களில் ஒருவனாக என்னை ஏற்றுக்கொண்டு அருள்வாயாக.
தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான்
தன்க டனடி யேனையுந் தாங்குதல்
என்கடன் பணி செய்து கிடப்பதே.
தெளிவுரை : முருகப் பெருமானைப் பெற்ற உமாதேவியாரைப் பாகமாகக் கொண்டு விளங்கும் சிவபெருமான். அழகிய கடம்பையில் திகழும் திருக்கரக்கோயிலில் வீற்றிருப்பவர். அப்பெருமான், அடியவனைத் தாங்கிக் காத்தருளும் கருணை வளத்தை இயல்பாகக் கொண்டு விளங்குபவர். என்னுடைய கடனாவது அப்பெருமானுக்குத் திருத்தொண்டு ஆற்றுதலேயாகும்.
சிறப்புரை : முருகப்பெருமான், ஈசனை வழிபட்ட திருத்தலச் சிறப்பானது இத்திருப்பாட்டில் குறிப்பால் சுட்டப்பெற்றது. ஈசன், அடியவர்களைத் தமது கருணையின் இயல்பால் தாங்கி அருள் புரிதலை, இவண் உணர்த்துதலாயிற்று. இது, அட்ட மூர்த்தங்களுள் விளங்கும் நிலமாகவும், நீராகவும், காற்றாகவும், நெருப்பாகவும், உஷ்ணம், வானாகவும், வளி இருந்து, நம்மை நாமே அறியாத நிலையில் ஈசன் தாங்கி நிற்றலையும் சுட்டுதலாம்.
வாரணன் குமரன் வணங்கும் கழல்
பூரணன் திரு பூவணூர் மேவிய
காரணன் வயெனை யாளுடை காளையே
தெளிவுரை : திருமால், நான்முகன், இந்திரன், விநாயகர், குமாரக் கடவுள் ஆகியோர் வணங்கும் திருக்கழலையுடையவராகிய பெருமான், பூரணனாகிப் பூவனூரில் மேவும் இறைவன் ஆவார். அப்பெருமான் என்னை ஆளுடைய பெருமான்.
வருமுறையால் சைவம் வளர்த்த பெருமை
இராஜராஜ சோழன் எந்நாளும் - இந்த
தராதலத் தார்கள் நெஞ்சமர்ந்தான் தான் வாழ்க
தேவாரத் தமிழ்மறையைத் தேடித் தந்த
திருமுறை கண்ட சோழனே!
மருந்தாலே ஆவுடையார் நிலைத்து நிற்கப்
பேரான நிழல் சாயாப் பெரியகோயில்
படைத்த சிவபாத சேகரனே!