நாவாரத் தியாகேசர் பாதம் போற்றும்
இராஜராஜ சோழனே! நின்புகழ் நெடிதுவாழ்க!
ஸ்ரீ அம்மன் சன்னதி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஆதி சக்தி மகா சக்தி பரா சக்தி ஓம்
மண்ணினல் லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணினல் லகதிக்கி யாதுமோர் குறைவிலைக்
கண்ணினல் லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணினல் லாளாடும் பெருந்தகை இருந்ததே.
போதையார் பொற்கிண்ணத் தடிசில்பொல்லாததன்
தாதையார் முனிவுறத் தாளனனை யாண்டவன்
காதையார் குழையின் கழுமல வளநகர்ப்
பேதையாள் அவளோடும் பெருந்தகை இருந்ததே
கருந்தடந் தேன்மல்கு கழுமல வளநகர்ப்
பெருந்தடங் கொங்கையோடு இருந்தஎம் பிரான்றனை
அருந்தமிழ் ஞானசம் பந்தன செந்தமிழ்
விரும்புவார் அவர்கள்போய் விண்ணுல காள்வரே

- சம்பந்தர்

நடராசர் சன்னிதி
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால் வண்ணீறும்
இனித்தமுடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே

- அப்பர்

தெளிவுரை : வளைந்த புருவம், கோவைப்பழம் போன்ற சிவந்த வாய், இனிய புன்னகை, குளிர்ந்த சடை, பவளம் போன்ற செம்மேனி, திருமேனியில் திகழும் பால்போன்ற திருவெண்ணீறு, உயிர்க்கு இனிமை சேர்க்கும் தூக்கிய திருவடி ஆகிய இவற்றைக் கொண்டு புரியும் ஈசனின் திருநடனக் காட்சியைக் காணப்பெற்றால், இவ்வுலகத்தில் மனிதப் பிறவியானது தேவையுடைய ஒன்றே இத்திருக்கோலக் காட்சியைக் கண்டு தரிசிக்கச் செம்மையானது பிறவியின் பயனாயிற்று.

தில்லை அம்பலவாணர்
தில்லைமூ வாயிரவர் பூசைபுரி பாதம்
தேவருடனேயிருவர் தேடரிய பாதம்
வல்லமா காளியுடன் வாதுபுரி பாதம்
மாமுனிவர்க்காய் எமனை மார்பிலுதை பாதம்
சொல்லவே பரவையிடம் தூதுசென்ற பாதம்
தொல்புலி பதஞ்சலியும் தொண்டுசெயும் பாதம்
அல்லலாம் ஏழ்பிறவி தீரநட மாடும்
ஆதிபுலி யூரர்திரு அம்பலவர் பாதம்!

தில்லை அம்பலவாணர் : தில்லை மூவாயிரவரால் பூசை புரியும் அம்பலவாணர் திருப்பாதம் திருமாலாலும், பிரமனாலும் அடிமுடி தேடி அறிய முடியாத திருப்பாதம், சகல கலைகளையும் அறிந்த காளிதேவியுடன் நடனமாடி வென்ற பாதம், மார்க்கண்டேயனுக்காக எமனை மார்பில் உதைத்த பாதம், சுந்தரருக்காக பரவை