நாச்சியாருக்கு தூது சென்ற பாதம் பராசர முனிவரும், பதஞ்சலி முனிவரும் தொண்டு செய்யும் பாதம்,
நம்முடைய ஏழுபிறவி தீவினைகளை நீக்க ஆதிபுலியூரில் (சிதம்பரம்) நடனமாடும் திரு அம்பலவாணர் பாதம் போற்றி வணங்குகிறோம்.
புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில்
அணைந்தபிரான் அடி போற்றி!
வாழி திருநாவலூர் வன்தொண்டர்
பதம் போற்றி!
ஊழிமலி திருவாதவூர்
திருத்தாள் போற்றி!
சைவத்தின் மேற்சமயம் வேறில்லை அதிற்சார் சிவமாம்
தெய்வத்தின் மேற்தெய்வம் இல்லைனும் நான்மறை செம்பொருள்
வாய்மை வைத்தசீர் திருத்தேவாரமும் திருவாசகமும்
உய்வைத் தரச் செய்த நால்வர் பொற்றாள் எம் உயிர்த்துணையே.
பூழியர்கோன் வெப்பொழித்த : பாண்டிய மன்னனின் வெப்புநோய் நீக்கிய சீர்காழியில் தோன்றிய திருஞானசம்பந்தர் திருத்தாள் போற்றி. கல்லில் கட்டிக் கடலில் வீசினும் தோணிபோல் மிதந்து கரையேறிய திருநாவுக்கரசர் திருத்தாள் போற்றி. திருநாவலூரில் உதித்த சுந்தரர் பெருமான் திருத்தாள் போற்றி. ஊழி காலத்திலும் ஊழி-பிரளயம் நிலைத்து நிற்கும் திருவாதவூரில் வந்து உதித்த மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி.
அஞ்சிலே ஒன்றாறாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவனம்மை அளித்துக் காப்பான்
- கம்பர்
மலைதனைப் பெயர்த்துவந்து இலக்குவன் மயக்கம்தீர்த்தான்
சிலை வீர ராமன் நாமம் செப்பிடும் செம்மனத்தான்
கலையலாம் கற்ற வாயு தனயனைக் கருத்துள் வைப்பாம்
- இராமாயணம்
பிரதி பஞ்சமி வளர்பிறை, தேய்பிறை திதியில் மஹா வாராஹி அம்மனுக்கு அபிஷேகங்களும், அலங்காரமும் மந்திர பூஜைகளும் மாலை நடைபெறும்.
பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருளும், அன்னதானமும் பெற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
நடத்துபவர் : மோகன் ஐயர்
தொடர்புக்கு : 9344147845