பூஜை முடிந்த பிறகு நீலக்கடலை அன்னதானம் வழங்கப்படும்.

கொடுப்பவர் : ஈசான சிவம் குமார்
வாட்ஸ்அப் தொடர்புக்கு : 9626 780 675

குறிப்பு : பிரதி வருடம் தமிழ் மாதம் ஆணி/ஆடியில் (ஜூலை-ஆகஸ்ட்) ஆஷாட நவராத்திரி 11 நாட்கள் யாக வேள்வியும் அம்மனுக்கான சிறப்பு அலங்காரமும் நடைபெறும். பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற வேண்டுகிறோம்.

அயிகிரி நந்தினி நந்தித மேதினி விச்வ வினோதினி நந்தனுதே
கிரிவரவிந்திய விரோதி நீவாஸினி விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணு நுதே
பகவதீஹே ஸிதிகண்ட குடும்பினி பூரி குடும்பினி பூரிக்ருதே
ஜயஜயஹே மஹிஷாஸீர மர்த்தினி ரம்பகபர்தினி சைலஸுதே
நரிபரி யாக்கிய சம்புவின் பாதத்தை நண்ணியமாள்
அரியயன் மாலும் போற்றும் அபிராமி தன்னடியார்க்குச்
சரியாக நின்று தருக்கஞ் மூடர்தலையை வெட்டி
எபரியாய் எரித்து விடுவாள் வராகியெனுந் தெய்வமே.

- 1887-ல் வெளிவந்த வராகிமாலை 31வது பதிகம்

நாயகி நான்முகி நாராயணிகை நளினபஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு
வாயகி மாலினி வாராகி! சூலினி மாதங்கி என்று
ஆயகி யாதி உடையாள் சரணம் அரண் நமக்கே!

- அபிராமி பட்டர்

மஹா வாராஹி என்பவள் தஞ்சை பெருவுடையார் திருக்கோவில் உள்ளே அவர்களுக்கெல்லாம் வேண்டியதை வேண்டிய வண்ணம் அருள்பாலித்து காத்து ரட்சிக்கக் கூடியவள். அவள் லலிதா பரமேஸ்வரனுடைய கையை சக்தியாக விளங்கக் கூடியவள். அப்படிப்பட்ட வாராஹியானவள் விஷக்கிருணன் என்ற அசுரனை சம்ஹாரம் பண்ணுவதற்காக இந்த அவதாரத்தை எடுக்க வேண்டிய ஒரு நிலை. அப்பேற்பட்ட வாராஹி ஆனவள் வெற்றிக்குடையவள். நம்முடைய அனைத்து காரியங்களும் வெற்றி அடையவே அவளை நாம் வழிபாடு செய்வோம்.

பைரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சவர்
உயிரவி உண்ணும் உயர்சண்டி, காளி ஒளிரும்கலா
வயிரவி, மண்டலி, மாலினி, சலி வராகி என்றே
செயிரவி நான்மறை சேர்திருநாமங்கள் செப்புவரே
ஓம் சக்தி ஓம் பராசக்தி ஓம்.
வாராஹி மாலை

பேய், பிசாசு, பில்லி மற்றும் சூன்யம் முதலான கொடுமைகளில் இருந்து விடுதலை அளிக்கும் அருள் நூலிது. வாராஹி அம்மனை வரவழைக்க உதவும் அற்புத ஸ்தோத்திரம்! இந்த வாராஹி மாலையை மனமுவந்து பாராயணம் செய்து வந்தால், உங்களுக்கு வாராஹி தரிசனம் கண்டிப்பாக கிடைக்கும். அம்பிகை நமக்கும் நல் உணர்வை ஊட்ட வேண்டுமென்று வேண்டுவோம்.