கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறந் தெல்லை இலாதானே நின்பெருஞ்சீர்
பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன்
விளக்கவுரை :
நெற்றிக்கண்ணாகிய சிவபெருமானின் திருவருட்பார்வை எனக்கு வழிகாட்டவும்,
அவ்வழியே நானும் வந்தடைந்து, சிந்தித்துப் பார்ப்பதற்கு எட்டாத அழகிய
அவனுடைய திருவடிகளை வணங்கி, விண்ணுலகம் மற்றும் மண்ணுலகம் யாவும் நிறைந்து,
அவற்றுக்கு அப்பாலும் பொருந்தி மேம்பட்டு விளங்குபவனே! ஒளியாய் இருப்பவனே!
அவைகளை எல்லாம் கடந்து, எல்லை இல்லாமல் இருப்பவனே! உன்னுடைய பெருஞ்சிறப்பை,
மிக்ககொடிய தீவினையுடைய நான், புகழ்ந்து பேசுவதற்கான வழி ஒன்றினை
அறியாதவனாக இருக்கிறேன்.
சொற்பொருள் :
கண்ணுதலான் - சிவபெருமான். நெற்றியில் கண் உடையவன்.
(நுதல்-நெற்றி) எழிலார் கழல் - அழகு நிறைந்த திருவடிகள்.
பெருஞ்சீர் - பெரும்புகழ்.
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
விளக்கவுரை :
புல், பூண்டு, புழு, மரம் இவைகளாகியும், பல்வேறு விலங்குகள், பறவைகள், பாம்பு,
கல், மனிதராகியும், பேயாகியும், பூதகணங்களாகியும், கொடிய அசுரராகியும்,
முனிவராகியும், தேவராகியும் நடவா நின்ற இந்த இயங்காப் பொருள்களும்,
இயங்கு பொருள்களும், ஆகிய இரண்டு வகையான பொருள்களுக்குள்ளே,
சொற்பொருள் :
பல்விருகம் - பல விலங்குகள், வல்லசுரர் - கொடிய அசுரர்.
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே
விளக்கவுரை :
யான் எல்லாப் பிறப்புகளிலும் பிறந்து, மெலிந்து விட்டேன். எம்பெருமானே!
உண்மையாகவே உம்முடைய பொன்னான திருவடிகளைக் கண்டு, இப்பொழுது வீடேறு
(முத்தி) அடைந்தேன். நான் இவ்வாறு வீடுபேறு அடைய, என்னுடைய உள்ளத்தில்
பிரணவமாய் நிலைத்த மெய்ப்பொருளே! தூய்மையானவனே! எனக்குமேல் அமர்ந்தவனே!
வேதங்கள் எல்லாம் ‘ஐயா’ என்றபடி வணங்கி, உயர்ந்தும் ஆழ்ந்தும் அகன்றும்
விளங்கும் நுட்பமானவனே!
சொற்பொருள் :
மெய் - உண்மை. வீடு - முத்தி. ஓங்காரம் - ‘ஓம்’ என்ற பிரணவம்.
விமலன் - தூய்மையானவன். விடைப்பாகன் - எருது வாகனன்.
வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா
பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி
மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே
விளக்கவுரை :
வெப்பமுடையவனே! குளிர்ச்சியுடையவனே! எனக்கு உரிமையானவனே! மாசற்றவனே!
பொய்யானவை எல்லாம் என்னைவிட்டு அகலுமாறு அருள் செய்து, மெய்ஞ்ஞானமாகி
ஒளிர்கின்ற மெய்ச்சுடரே! எவ்வித ஞானமும் இல்லாத எனக்கு இன்பம் தரும்
பெருமானே! அஞ்ஞானத்தை அகற்றும் நல்லறிவே!
சொற்பொருள் :
மெய் - உண்மை. வீடு - முத்தி. ஓங்காரம் - ‘ஓம்’ என்ற பிரணவம்.
விமலன் - தூய்மையானவன். விடைப்பாகன் - எருது வாகனன்.
வெய்யாய்த் தனியாய் இயமான னாம் விமலா
பொய்யா பினவெல்லாம் போயகல வந்தருளி
மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே.