1. வசீகரணம் (தியானம்)

இருகுழை கோமளம் தாள் புஷ்பராகம் இரண்டு கண்ணும் குருமணி நீலம் கை கோமேதகம் நகம்
கூர்வயுரம் திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்தவல்லி மரகத நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே.

2. காட்சி (யந்த்ர ஆவாஹனம்)

தோராத வட்டம் முக்கோணம் ஷட்கோணம் துலங்கு வட்டத்து ஈராறிதழ் இட்டு ரீங்காரம் உள்ளிட்டது
நடுவே ஆராதனை செய்து அருச்சித்துப் பூஜித்தபடி பணிந்தால் வாராதிராள் அல்லவோ ஞான
வாராஹியுமே.

3. பகைதடுப்பு (பிரதாபம்)

மெய்ச்சிறத்தாற் பணியார் மனம் காயம் மிக வெகுண்டு கைச்சிரத் தேந்திப் புலால்நிணம் நாறக்
கடித்துதறி வச்சிரத் தந்த முகப் பணியாற் குத்தி வாய்கடித்துப் பச்சிரத்தம் குடிப்பாளே வாராஹி பகைஞரையே.

4. மயக்கு (தண்டினி தியானம்)

படிக்கும் பெரும்புகழ்ப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை அடிக்கும் இரும்புத் தடிகொண்டு பேய்கள் அவர்
குருதி குடிக்கும் குடர் கொண்டு தோள்மாலை இட்டுக் குலாவிமன்றில் நடிக்கும் வாராஹி பதினாலுலகம்
நடுங்கிடவே.

5. வெற்றி ஈர்ப்பு (சத்ரு ஸம்ஹாரம்)

நடுங்கா வகை அன்பர் நெஞ்சினிற் புக்கவர் நண்ணலரைக் கொடும் காளி உண்ணக் கொடுக்கு
குருதிகள் கொப்பளித் தீட்டிடும் பாரக் கொங்கையின் மீதே இரத்தத் திலகம் இடும் தோடும்கள் மனோன்மணி
வாராஹி நீலி தொழில் இதுவே.

6. உச்சாடனம் (ரோக ஹரம்)

வேயக்குலம் அன்னதிண்தோளாள் வாராஹி தன் மெய்யன்பரை நோய்க்குலம் என்ன இடும்பு
செய்வார் தலை நொய்கழித்துப் பேய்க்குலம் உண்ணப் பலிகொண்டு போட்டுப் பிணக்குடிரை நாய்க்குலம்
கௌவக் கொடுப்பாள் வாராஹி என் நாரணியே.

7. எதிர்ப்புக் கட்டு (சத்ருஹரம்)

நாசப்படுவர் நடுங்கப்படுவர் நமன்கயிற்றால் வீசப்படுவர். வினையும் படுவம் இடம் மேதினியோர்
ஏசப்படுவர். இழுக்கும் படுவர் என் ஏழை நெஞ்சே வாசப் புதுமலர்த் தேனாள் வாராஹியை வாழ்த்தியரே.

8. பெருவச்யம் (திரிகாலஞானம்)

வாலை புவனை திரிபுரை மூன்றும் இவ்வையகத்திற் காலையும் மாலையும் உச்சியும் ஆகவேக்
காலத்துமே ஆலயம் எய்தி வாராஹி தன் பாதத்தை அன்பில் உன்னி மாலயன் தேவர் முதலான பேர்களும்
வாழ்த்துவரே.

9. பகைமூடிப்பு (வித்வேஷணம்)

வருந்திப் பகைத்தீர் என்னோடறியாமல் முன் வானவர்க்காச்
சிரித்துப் புரம் எரித்தோன் வாம பாகத்துத் தேவி எங்கள்
கருத்திற் பயிலும் வாராஹி என் பஞ்சமி கண்சிவந்தால்
பருத்திப் பொதிக்கிட்ட தீப்பாறி காணும் பகைத்தவர்க்கே.

10. வாக்குவவற்றி (சத்ரு மாரணம்)

பாப்பட்ட செந்தமிழ்ப் பாவாணர் நின்மலர்ப் பாதம் தன்னிற்
பூப்பட்டதுவும் பொறிபட்டதோ? நின்னையே புகழ்ந்து
கூப்பிட்ட துன் செவி கேட்கலையோ? அண்ட கோளமட்டும்
தீப்பட்டதோ? பட்டதோ நிரந்தை யாளர்தரு எங்குமே.