11. தேவி வருகை (பூதபந்தனம்)

எங்கும் எரியக் கிரிகள் பொடிபட எம்பகைஞர்
அங்கம் பிளந்திட விண்மண் கிழிந்திட ஆர்த்தெழுந்து
பொங்கும் கடல்கள் சுவறிடச் சூலத்தைப் போகவிட்டுச்
சிங்கத்தின்மீது வருவாள் வாராஹி சிவசக்தியே.

12. ஆத்ம பூஜை (மஹாமாரி பந்தனம்)

சக்தி கவுரி மஹமாயி ஆயி என் சத்துருவைக்
குத்தி இரணக் குடரைப் பிடுங்கிக் குலாவிநின்றே
இத்திசை எங்கும் நடுங்கக் கிரிகள் இடிபடவே
நித்தம் நடித்து வருவாள் வாராஹி என் நெஞ்சகத்தே.

13. தேவிதாபனம் (பில்லி மாரணம்)

நஞ்சம் தன்னில் நிறைந்திருக்கின்றவன் நிர்க்குணத்தி
நஞ்சணி கண்டத்தி நாராயணிதனை நம்புதற்கு
வஞ்சனை பண்ணி மதியாத பேரை வாழ்நாளை உண்ணக்
கொஞ்சி நடந்து வருவாள் வாராஹி குலதெய்வமே.

14. மந்திர பூஜை (மூனி மாரணம்)

மதுமாமிசம்தனைத் தின்பாள் இவள் என்று மாமறையோர்
அதுவே உதாஸினம் செய்திடுவர் அந்த அற்பர்கள் தம்
கதிர்வாய் அடைத்திட உள்ளம் கலங்கக் கடித்தடித்து
விஜர் வாளில் வெட்டி எறிவாள் வாராஹி என் மெய்த்தெய்வமே.

15. வாராஹி அமர்தல் (மூர்த்தி தியானம்)

ஐயும் கிலியும் எனத் தொண்டர் போற்ற அரிய பச்சை
மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியு(ம்) மலர்க்
கையும் பிரம்புக் கபாலமும் கலமும் கண் எதிரே
வையம் துதிக்க வருவாள் வாராஹி மலர்க்கொடியே.

16. வரம் பொழிதல் (எதிரி மாரணம்)

தாளும் மனமும் தலையும் குலையத் தரியலர்கள்
மாளும் படிக்கு வரம் தருவாய்: உன்னை வாழ்த்தும் அன்பர்
கோளும் பகையும் குறியார்கள் வெற்றி குறித்த சங்கும்
வாளும் கடகமும் சூலமும் ஏந்தி வரும் துணையே!

17. வாழ்த்துதல் (உலகமாரணம்)

வருந்துனை என்று வாராஹி என்றன்னையை வாழ்த்தி நீதம்
பொருந்தும் தகைமையைப் பூணாதவர் புலால் உடலைப்
பருந்தும் கழுகும் ஓவம் பூதமும் வெய்ய பிசாசுகளும்
விருந்துண்ணப் பட்டுக் கிடப்பர்கண்டீர் உடல் வேறுபட்டே.

18. நன்னீர் வழங்கல் (எவல் பந்தனம்)

வேறாக்கும் நெஞ்சும் வினையும் வெவ்வேறு வெகுண்டலம்
கூறாக்கும் நெஞ்சத்திற் செந்நிறம் ஆன குருதி பொங்கச்
சேறாக்கும் குங்குமம் கொங்கையிற் பூசும் திலகம் இடும்
மாறாக்கும் நேமிப் படையாள் தலைவணங்காதவர்க்கே.

19. புனிதநீர் அருந்துதல் (துஷ்ட பந்தனம்)

பாடகச் சீறடிப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
ஓடவிட்டே கை உலக்கைகொண் டேற்றி உதிரம் எல்லாம்