விளங்குகின்ற பத்துத் திருத்தலங்களையும் ஐந்து திருமுறைகளையும் உடைய சிவபெருமானது திருநாமங்களைப் போற்றி வணங்கி, சிவலிங்க ரூபமான திருமேனியைச் சிந்தித்துக் கொண்டே அவற்றின் நாமங்களை வணங்குவோம்.

ஸ்ரீ ஆதிசத்தி விநாயகர் சன்னதி

திருவாங் கல்வியும் சீருஞ் சிறப்புடன்
திருவடிப்புகழ் பாடுந்திறமும் நல்
உருவஞ்ச் சீழமும் உக்கமும் தாழ்வுறா வுணர்வுந்
தந்தென துள்ளந் தமர்ந்தவா
குருவுந் தெய்வமுமாகி அன்பாளர்தங் குறைதவிர்க்கும்
குணப்பெருங் குன்றமே
வெருவுச் சிந்தை விலகக் கஜானனம் விளங்கும்
சித்தி விநாயக வள்ளலே.

ஸ்ரீ உலக நாயகி சன்னதி (அங்கயற்கண்ணி)

மங்கையர்க்கரசி வள்ளல்கோன் பாலா
வளிமணைக் கையம்மாள் தேவி
பணிசெய்த நாதனென்னும் பரவு
பொங்கது ஒருவன் புதுநாயகனாய்
வேதமும் பொருளும் அருளி
அங்கயற் கண்ணி தன்னோடும் அமர்ந்த
ஆதிமா யாவதும் இதுவே.

சிவசிவ

திருச்சிற்றம்பலம்

மங்கையர்க்கு அரசியார் பாடல்(உலக நாயகி)

அங்கையர்க்கரசியார் சோழ மன்னனின் மகள், கைகளில் அழகான வளயல்களை அணிந்தவர். பெண்மக்குரிய மடம் என்னும் பண்புக்குரிய பெருமையுடையவர். தாமரை மலரில் வீற்றீக்கும் திருமகளுக்கு ஒப்பனவர். பாண்டிய மன்னனின் பட்டத்தரசி. சிவத்தொண்டு செய்து நாள்தோறும் சிவபருமனைப் போற்றி வழிபடுபவர். அச்சிவபெருமான் ஓங்கி எரியும் நெருப்புப் போன்ற சிவந்த வண்ணமுடைய தூய உருவினன். உயிர்கட்கெல்லாம் தலைவர் நான்கு வேதங்களையும் அவற்றீன் பொருட்களையும் அருளிச் செய்தவர். அப்பெருமான் அங்கையற்கண்ணி உடனாக வீற்றிருந்தருளும் திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவேயாகும்.

சித்தர் கருவூரார் சன்னதி

பிரதி வாரம் செவ்வாய் மற்றும் சனிக்கிழமை கூட்டு வழிபாடு சித்தர் கருவூரார் சன்னதியில் நடைபெறும். அடியார் பெருமக்கள் கலந்து கொண்டு அருள் பெற வேண்டுகிறோம்.