நேரம் : மாலை 6.45 மணி முதல் இரவு 7.15 மணி வரை
அன்னதானம் : ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.00 மணி, திலகர் திடல் நுழைவுவாயில்
நடத்துபவர் கருவூரார் சன்மார்க்க சங்க அறக்கட்டளை
நெற்றியிற் கண் என்கண் நின்றகலா
நெஞ்சினில் அஞ்சிலம் அலைக்கும்
பொற்றிருவடி என் குடிமுழுதாளப்
புகுந்தன போந்தன இல்லை
மற்றை எனக்கு உறவேன்? மறிதீரை வடபாற்
நிடுபுனல் மதகில் வாழ் முதலை
ஏற்றுநீர்க் கிடங்கில் இஞ்சிகழ் தஞ்சை
இராசராசேச்சரத்து இறைவர்க்கே
- திருவிசைப்பா
தெளிவுரை :மடங்கி விழும் அலைகளை உடைய வடவாற்றின் நீர் செல்லும் மதகில் வாழ்கின்ற முதலைகள் வாரி
எறிநின்ற நீரை உடைய அகழியோடு கூடிய மதில்களால் சூழப்பட்ட தஞ்சை மாநகரில் உள்ள இராசராசேச்சரம்
என்னும் பெரிய கோயிலில் எழுந்தருளிய இப்பருவுடையாரது நெற்றியிலுள்ள கண்கள் என்
கண்களினின்றும் நீங்கா அவரது அழகிய சிலம்புகள் ஒலிக்கின்ற பொன் போன்ற அழகிய திருவடிகள் என்
இல்லம் முழுவதையும் ஆட்கொள்ளும் பொருட்டு என் நெஞ்சினுள் புகுந்தன அவை மீண்டும் வளியே
வரவில்லை. ஆதலின் இவரைத் தவிர வேறு உறவினர் எனக்கு எதற்கு ?
கருவூரார் காப்பு
காப்பான கருவூரார் போகநாதர்
கருணையுள்ள அகத்தீசர் சட்டைநாதர்
மூப்பான கொங்கணரும் பிரமசித்தர்
முக்கியமாய் மச்சமுனி நந்திதேவர்
கோப்பான கோரக்கர் பதஞ்சலியார்
கூர்மையுள்ள இடைக்காடர் சண்டிகேசர்
வாப்பான வாதத்திற்கு ஆதியான
வாசமுனி கமலமுனி காப்புத்தானே
பதினெண் சித்தர்கள் சரணம்
அனந்த சயனத்தில் ஜோதியான ஓம் அகத்தியர் தீருவடி சரணம்
திருவையாற்றில் ஜோதியான ஓம் அகப்பேய்ச் சித்தர் திருவடி சரணம்
நாகையில் ஜோதியான ஓம்அழுகண்ணர் திருவடி சரணம்
திருவண்ணாமலையில் ஜோதியான ஓம் இடைக்காடர் திருவடி சரணம்
திருக்காளத்தியில் ஜோதியான ஓம் கருவூரார் திருவடி சரணம்
மதுரையில் ஜோதீயான ஓம்கமலமுனிவர் திருவடி சரணம்
காஞ்சியில் ஜோதியான ஓம்காளங்கிநாதர் திருவடி சரணம்
மயிலாடுதுறையில் ஜோதியான ஓம்குதம்பைச் சித்தர் திருவடி சரணம்
திருக்கோண மலையில் ஜோதியான ஓம் கோரக்கர் தீருவடி சரணம்
திருவரங்கத்தில் ஜோதியான ஓம் சட்டநாதர் திருவடி சரணம்
திருப்பதியில் ஜோதியான ஓம்கொங்கணவர் திருவடி சரணம்
சிதம்பரத்தில் ஜோதியான ஓம் திருமூலர் திருவடி சரணம்
பொதிகையில் ஜோதியான ஓம்தேரையர் திருவடி சரணம்
காசியில் ஜோதீயான ஓம்நந்திதேவர் திருவடி சரணம்
இராமேஸ்வரத்தில் ஜோதியான ஓம் பதஞ்சலி முனிவர் திருவடி சரணம்
மருதமலையில் ஜோதியான ஓம் பாம்பாட்டி சித்தர் திருவடி சரணம்