அம்மன் சன்னிதி — (அன்றே என்ற ஆவியும்)
எட்டு கோள்களையும், மூன்று கண்களையும் உடைய எம் தலைவனே! மலையையொத்த பெரியோனே! என்னை ஆட்கொள்ள வந்த அன்றே, என்னை ஆட்கொண்ட அப்பொழுதே என்னுடைய உயிரையும், உடம்பையும், பொருள் எல்லாவற்றையும் உன்னுடையதாக ஏற்றுக்கொள்ளவில்லையோ? அங்கனமே இப்பொழுது ஒரு துன்பம் எனக்கு உண்டாகுமோ? எனக்கு உண்டாகாது. ஆதலின், எனக்கு நன்மையே செய்வாய் எனினும், தீமை செய்வாய் எனினும், இத்தன்மைக்குத் தலைவன் யானோ? (இல்லை).
பன்னெடுங்காலம் பணிசெய்து பழையோர் தாம்பலர் ஏம்பலித் திருக்க
என்னெடுங் கோயில் நஞ்சுவீற் றிருந்த எளிமையை என்றும்நான் மறக்கேன்
மின்னெடுங் புருவத்து இளமயில் அனையார் விலங்கல்செய் நாடக சாலை
இன்னடம் பயிலும் இஞ்சிகழ் தஞ்சை இராச இராசேச்சரத் திவர்க்கே.
பன்னெடுங்காலம் பணிசெய்து பழையோர் தாம்பலர் ஏம்பலித் திருக்க
என்னெடுங் கோயில் நஞ்சுவீற் றிருந்த எளிமையை என்றும்நான் மறக்கேன்
மின்னெடுங் புருவத்து இளமயில் அனையார் விலங்கல்செய் நாடக சாலை
இன்னடம் பயிலும் இஞ்சிகழ் தஞ்சை இராசராசேச்சரத் திவர்க்கே.
தெளிவுரை: நெடுங்காலமாகத் தங்களால் இயன்ற சிவத்தொண்டு செய்து முன்னோர் பலர் தரிசிக்கும் பொருட்டு வருந்திக் கொண்டிருக்க, மின்னல் போலும் ஒளிவீசும் நீண்ட புருவத்தினை உடைய இளமயில் போன்ற பெண்கள் மலையின் தோற்றத்தைப் போன்று உயர்ந்து காட்சியளிக்கும் நாடக சாலைகளில் இனிய நடனம் செய்கின்றதும், மதில்கள் சூழ்ந்ததுமான தஞ்சை மாநகரில் உள்ள இராசராசேச்சரம் என்னும் பெரிய கோயிலில் எழுந்தருளிய இப்பெருவுடையார் பெரிய கோயிலாக என் மனத்தினிடத்து வந்து வீற்றிருக்கும் எளிமைத் தன்மையை யான் எப்பொழுதும் மறவேன்.
பாலுக்குப் பாலகன் வேண்டி அமுதிடப் பாற்கடல் ஈந்தபிரான்
மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன் மன்னிய தில்லைதன்னுள்
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம் பலமே இடமாகப்
பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே பல்லாண்டு கூறுதுமே
-சேந்தனார்
தெளிவுரை:வியாக்கிரபாத முனிவரின் குழந்தையாகிய உபமன்யு முனிவர் பசியினால் பாலை விரும்பி உண்ண, அருளிய பெருமானும், திருமாலுக்குச் சலந்தராசுரனைப் பிளந்த சுதர்சனம் என்னும் சக்கரப்படையைக் கொடுத்தருளிய இறைவனும், என்றும் நிறைந்து திகழும் சிற்றம்பலத்தை இடமாகக் கொண்டு அன்பர் வேண்டிய ஆனந்த நடனம் புரிய வல்லவனும் ஆகிய சிவபெருமானைப் புகழ்ந்து பல்லாண்டு வாழ்க எனக் கூறி நாம் வணங்குவோம்.
உலகெலா முணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அழகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.