திருத்தொண்டர் புராணம்

முதல் காண்டம்

1. பாயிரம்

கூத்தப் பெருமாள் துதி

உலகங்கள் எல்லாவற்றாலும் இன்ன தன்மையன் என்று உணர்தற்கும், இன்ன தன்மையன் என்று சொல்வதற்கும் அரியவனாயும், அவ்வாறு அரியவன் ஆயினும் யாவரும் எளிதில் கண்டு உய்ய வேண்டும் என்ற அருளால் மூன்றாம் பிறைச் சந்திரன் உலாவுவதற்கு இடமாய்க் கங்கையைத் தரித்த சடையை உடையவனாயும், அளவில்லாத ஒளியை உடையவனாயும், தில்லைப்பகுதியில் திருச்சிற்றம்பலத்தில் ஆனந்த கூத்து ஆடுபவனாயும் உள்ள இறைவனின், அன்பரின் உள்ளத்தில் மலரும் சிலம்பினை அணிந்த திருவடிகளை வாழ்த்தி வணங்குவோம்.

வாழ்த்து

வெள்ளி வெற்பின்மேல் மரகதக் கொடியுடன் விளங்கும்
தெள்ளு பவளமலை என இடப்பாகம்
கொள்ளும் மாமலையாளுடன் கூட வீற்றிருந்த
வள்ளலாரை முன் கண்டனர் வாக்கின் மன்னவனார்.

வெள்ளி மலைமீது மரகதக் கொடியுடனே விளங்கும் தெளிந்த பவள மலை என்று கூறும்படியாய் இடப்பாகத்தைக் கொண்ட உமையம்மையாருடன் கூடி வீற்றிருக்கும் வள்ளலான சிவபெருமானைத் திருநாவுக்கரசு நாயனார் தம் கண் முன்னம் கண்டார்.

தஞ்சை

அஞ்சன வேல்விழி மடமாதர்
அங்கவர் மாயையின் வலைவேனோ
விஞ்சுறு மாவுன தடிசேர
விம்பம தாயருள் அருளாயோ
நஞ்சமுதாவுணு மரனார்தம்
நன்குமராவுமை அருள்பாலா
தஞ்சென வாமடி யவர்வாழத்
தஞ்சையில் மேவிய பெருமாளே.

(நஞ்சமுதா என்பது முதல் பெருமாளே என்பது முடிய)

ஆலகால நஞ்சினையும் அமுதமாய் உண்ட சிவபெருமானது நல்ல மைந்தனே! உமை அருள் பாலனே! அடைக்கலமான அடியார் வாழத் தஞ்சை நகரத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

(அஞ்சன என்பது முதல் அருளாயோ என்பது முடிய)

மை தீட்டப்பெற்ற வேல் போன்ற விழிகளை உடைய அழகிய மங்கையராம் அவர்களிடத்தில் மாயை மயக்கில் நான் அலைச்சல் அடைவேனே! நான் மேன்மையடையவும் நின் திருவடியைச் சேரவும் ஒளிவகையில் நின் திருவருள் எனக்கு அருளாதோ!

விளக்கம்:: விஞ்சுறு - மேன்மையடையும் படியாகவும்; விம்பம் - ஒளி; தஞ்சு என - அடைக்கலம் என்று.