விளக்கு ஏற்றிய பிறகு பாடவேண்டிய திருவாசகப் பாடல்

சோதியே சுடரே சூழொளி விளக்கே
சுரிகுழற் பணைமுலை மடந்தை
பாதியே பரனே பால் கொள் வெண்ணீற்றாய்
பங்கயத்து அயனும் மாலறியா
நீதியே செல்வத் திருப்பெருந்துறையில்
நிறைமலர்க் குருந்தமேவிய சீர்
ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றருளாயே.

அருட்பத்து (திருப்பெருந்துறையில் அருளியது)

மகாமாயா சுத்தி

(எழுசீர் விருத்தம்)

அருட்பத்து என்பது, எல்லையற்ற இறைவனின் அழகான திருவருளை விரும்பிப் போற்றிப் பாடிய பத்துப் பாடல்களின் தொகுப்பு.

மகாமாயை சுத்தி என்பது, இறைவனின் திருவருளை வேண்டும்போது, அதற்குத் தடையாக உள்ள மாயையைத் தூய்மை செய்து கொள்ளல் என்பதாகும்.

இப்பகுதியில் 10 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. பத்துப் பாடல்களுமே “அதெந்துவே என்றருளாயே!” என்று முடிந்துள்ளன.

சோதியே சுடரே சூழொளி விளக்கே
சுரிகுழற் பணைமுலை மடந்தை
பாதியே பரனே பால் கொள் வெண்ணீற்றாய்
பங்கயத் தயனுமா லறியா
நீதியே செல்வத் திருப்பெருந் துறையில்
நிறைமலர்க் குருந்தமே வியசீர்
ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றருளாயே.

விளக்கவுரை: சோதியே! சுடரே! ஒளிதரும் விளக்கே! சுருண்ட கூந்தலையும், பருத்த கொங்கைகளையும் உடைய உமாதேவியார்க்கு ஒரு பாகத்தைக் கொடுத்தவனே! உயர்ந்தவனே! பால் போன்ற வெண்ணீற்றை அணிந்தவனே! தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும் தேடியும் காண முடியாத நீதியே! செல்வம் நிறைந்த திருப்பெருந்துறையில், மலர் மிகுந்த குருந்த மரத்தின் கீழே விளங்குகின்ற சிறந்த முதல்வனே! அடியேன் உன்னை அன்புகாட்டி அழைத்தால், எனக்கு நீயும் அருள்வாயாக!

சொற்பொருள்: சுரிகுழல் - சுருண்ட கூந்தல்; பணை - பருத்த; குருந்தம் - குருந்தமரம்.

நடராஜரைப் போற்றும் நவீன விஞ்ஞானம்

ஜெனிவாவிலுள்ள ஐரோப்பிய அணு இயற்பியல் ஆராய்ச்சிக் கூடம் (European Center for Particle Physics Research - CERN), செப்டம்பர் 10, 2008 அன்று அங்கு இதுவரை இல்லாத அளவில் உலகில் மிகப் பெரிய அறிவியல் பரிசோதனை தொடங்கப்பட்டது. மறுநாள் டைம்ஸ் ஆப் இந்தியா இந்தச் செய்தியைக் கடவுள் அணுவிற்கான ஆய்வு தொடங்கியது என்று தொடங்கியது.