ஹாட்ரான் மோதும் பேரியந்திரம்

CERN-இல் துகள்களைத் துரிதப்படுத்தி மோத வைக்கும் ராட்சத எந்திரம் Large Hadron Collider - LHC அமைந்துள்ளது. இது 27 கி.மீ. நீளமுள்ள ஒரு வட்டமான சுரங்கம் போன்று பூமிக்கடியில் பிரான்சுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையில் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுவளையமான இச்சுரங்கத்தில் எதிர் எதிராக படைக்கப்பட்ட துகள்கள் மோதும்போது முதல் சில கணங்களில் நடந்த நிகழ்வுகளைப் பற்றி அறிவதே இந்த ஆய்வின் நோக்கம். மேலும் ஆராய்ச்சியாளர்கள் கடவுள் அணுத்துகள் எனப்படும் Higgs Boson-ஐ ஆராயவும் இது துணைபுரியும் என்று நம்புகின்றனர்.

நடராஜரின் தலைமையில்

உலகமே இந்த ஆராய்ச்சி பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும் வேளையில் அண்ட சராசரத்தின் தலைவரான தில்லையம்பல நடராஜரின் தலைமையில் இந்த ஆராய்ச்சி நடக்கிறது என்பது மிகச் சிலர் மட்டுமே அறிந்த ஒன்று!

ஜெனிவாவில் CERN தலைமையகத்தின் முகப்பில் ஆறு அடி உயரமுள்ள ஒரு நடராஜர் சிலை உள்ளது. இந்தச் சிலையின் கீழே உள்ள செவ்வகப் பீடத்தின் முகப்பில் சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலத்தில் கீழ்க்கண்டவாறு பொறிக்கப்பட்டுள்ளது.

எங்கும் நிறைந்தவனே! நற்குணங்களின் உருவே! இந்த அண்டசராசரத்தைப் படைத்தவனே! ஆடலரசே! அந்தி நேரத்தில் ஆனந்தத் தாண்டவம் ஆடியவனே! உமக்கு நமஸ்காரம்! (மூலம்: சிவானந்தஹரி சுலோகம் 56? ஆதிசங்கரர்). நன்றி. அணுசக்தித் துறை, இந்திய அரசாங்கம்.

இந்திய அணுசக்தித் துறை உலகப் புகழ்பெற்ற ஓர் ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கூடத்திற்கு ஏன் இச்சிலையை அன்பளிப்பாகக் கொடுக்க வேண்டும்? நடராஜனின் திருமேனிக்கும் நவீன இயற்பியலுக்கும் என்ன சம்பந்தம்?

1300 கோடி வருடங்களுக்கு முன் பேரொளியுடன் கூடிய மிகப்பெருவெடிப்பு Big Bang உண்டாயிற்று. அதற்கு முன் பிரபஞ்சம் ஒரு மாபெரும் அடர்த்தியான, அதிக வெப்பம் மற்றும் அழுத்தம் மிகுந்த ஒரு சக்தித் தொகுப்பாக இருந்தது.

இத்தொகுப்பு அதிவிரைவாக விரியவும் சுருங்கவும் செய்தது. அதனால் அது மாறி மாறி மிகச் சூடாகவும் குளிர்ச்சியாகவும் ஆயிற்று. இப்பெருவெடிப்புக்குப் பின் பிரபஞ்சம் விரிவடையத் தொடங்கியது. மிக அதிக வெப்பத்தில் இச்சக்தித் தொகுப்பு சிறு துகள்களாகப் பிரியத் தொடங்கியது. இத்துகள்களின் எண்ணிக்கையும் பன்மடங்காயிற்று. இதன் தொடர்ச்சியால் உருவாக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே பல துகள்கள் அழிந்தன. மேலும் பல உருவாயின. வெப்பம் குறையத் தொடங்கியவுடன் இச்சிறு அணுத்துகள்கள் இணைந்து பெரிய பிரபஞ்சம் உருவானது.

இன்றும் கூட இப்பிரபஞ்சத்தின் ஒரு மூலையில் சிறு அணுத்துகள்கள் சேர்ந்து பெரிய பகுதிகளாக உருவாகும் நிகழ்வுகள் விண்வெளியில் மட்டுமன்றி பூமியிலும் நடைபெறுகின்றன. இந்த நிகழ்வுகளால் உருவாகும் காஸ்மிக் கதிர்கள் பூமியை வந்தடைகின்றன.

இந்தத் துகள்கள் நமது மூலக்கூறு பகுதியும், பிரபஞ்சத்தின் கட்டுமானக் கற்களும் ஆகும். தோன்றுவதும் இயங்குவதும், ஒடுங்குவதும் பிரபஞ்சத்தின் அடிப்படையாகும். இதை நம் முன்னோர் சிவனின்