அர்த்தஜாம பூஜை வழிபாடு

ஆரம்பிக்கும் நேரம் : இரவு 8.30 மணி      முடியும் நேரம் : இரவு 9.00 மணி

அடியார்கள் அனைவரும் இப்பூஜையில் கலந்து கொண்டு இறைவன் அருள்பெற அன்புடன் அழைப்பது அர்த்தஜாம பூஜை சிவனடியார்கள்.

குருவணக்கம்

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்.
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்.
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.

கொடிக்கவி

அஞ்செழுத்தும் எட்டு எழுத்தும், ஆறு எழுத்தும் நாலு எழுத்தும்
பிஞ்சு எழுத்தும் மேலைப் பெரு எழுத்தும் - நஞ்சு அழுத்திப்
பேசும் எழுத்துடனே பேசா எழுத்தினையும்
கூசாமல் காட்டிக் கொடி

விநாயகர் வழிபாடு

திருவாக்கும் செய்கருமம் கைகூடும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர் தம்கை.

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாமம் தன்மையினால்
கண்ணிற் பணியின் கனிந்து,
— திருவிரட்டை மணிமாலை

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.

— திருமந்திரம்

வானுலகும் மண்ணுலகும் வாழமறை வாழப்
பான்மைதரு செய்யதமிழ் பார்மிசை விளங்க
ஞானமத ஐந்துகர மூன்றுவிழி நால்வாய்
ஆனை முகனைப் பரவி அஞ்சலி செய்கிற்பாம்.

— சேக்கிழார்

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்.
தப்பாமல் சார்வார் தமக்கு

— மூதுரை