சொற்பொருள் : புறந்தோல் - வெளித்தோல், மலஞ்சோரும் - அழுக்கு ஒழுகுகின்ற, ஒன்பது வாயில் குழல் - ஒன்பது வாசல்களைக் கொண்ட உடம்பு.

விலங்கு மனத்தால் விமலா உனக்குக்

கலந்த அன்பாகிக் கசிந்துள் உருகும்

நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி

நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி

நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்

விளக்கவுரை : அதன் பயனாக யான் பெற்ற விலங்கின் தன்மை கொண்ட உள்ளத்தால், தூய்மையானவனே! உனக்காக உள்ளத்தில் அன்பு கலந்து, நெஞ்சம் உருகும் நல்ல செயல்தான் இல்லாத சிறியேனாகிய எனக்காக, ‘நீதான் மனங்கொண்டு அருள்செய்து, இந்தநிலத்தின் மேல் வந்தருளி, உன்னுடைய நெடிய திருவடிகளை எனக்குக் காட்டி, நாயை விட இழிந்தவனாக இருந்த எனக்குத்
சொற்பொருள் : விமலன் - தூய்மையானவன். நீள் கழல்கள் - நெடிய திருவடிகள். கடை - இழிந்த.

தாயிற் சிறந்த தயவான தத்துவனே

மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே

தேசனே தேனார் அமுதே சிவபுரனே

பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே

நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்

விளக்கவுரை : தாயை விடவும் மேலான கருணை கொண்டவனாகிய மெய்ப்பொருள் ஆனவனே! குற்றமற்ற ஒளியாய் ஆனவனே! புகழ்பெற்ற பெருமானே! தேன் போன்ற சுவையான அமுதமானவனே! சிவபுரத்தை வாழும் இடமாகக் கொண்டவனே! பந்தபாசம் என்னும் பற்றை விலக்கி, ஆட்கொண்டு கடைத்தேற்றும் குருவானவனே! என்றி அன்பு கொண்டு, என் வஞ்சக எண்ணம் கெடும்படி.
சொற்பொருள் : தயவு - கருணை. மாசற்ற - குற்றமற்ற. ஆரியன் - குரு. நேசம் - அன்பு.

பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே

ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே

ஓராதார் உள்ளத்து ஒளியானே

நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே

இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே

விளக்கவுரை : பேராற்றல் நிலைபெற்ற பெருங்கருணைப் பேராறே! உணர்ந்து தெவிட்டாத அமுதே! அளவில்லாத பெருமிதம் கொண்ட பெருமானே! ஆராயாதவரின் மனத்திலும், அவர்கள் அறியாமல் மறைவாய் நிற்கும் ஒளியுமானவனே! என் உள்ளத்தை நீராக உருக்கிச் செய்து, என் அருமை உயிரென நிலைபெற்றவனே! உனக்கெனத் தனியாக இன்பமும், துன்பமும் இல்லாதவனே! அன்பு காட்டும் அடியவர்களுக்காக அவ்விரண்டையும் உடையவனே!
சொற்பொருள் : பேராது - பெயராமல். ஓராதார் - ஆராயாதவர். கடவுளைத் தேடாதவர். ஒளிக்கும் - ஒளிந்திருக்கும்.

அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாம்

சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே

ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே

ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே

கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டுணர்வார் தங்கருத்தின்

விளக்கவுரை : அன்பருக்கு அன்பனே! உலகில் அனைத்தும் பொருள்களாகவும் விளங்கி, அவையனைத்தும் அல்லாதவனுமாயும் விளங்கி நிற்கும் ஒளி உருவினனே! நெருங்கிய இருள் உருவினனே! சிறந்த பெருமிதம்