பைரவர் சூட்சமம்
ஓம் அதுபோல் எனக்கும் என் குழந்தைகளுக்கும், மனைவிக்கும், குடும்பத்திற்கும், தொழிலிற்கும், தொழில் இயங்கும் சக்திகளுக்கும், எனது விசுவாசிகளுக்கும் அருள்வாயே போற்றி.
பைரவர் சூட்சமம்
அளவற்ற கீர்த்தியையும், தனத்தையும் தரும் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவ அஷ்டகம். பௌர்ணமி அன்று இரவு எட்டு மணிக்கு தீபத்தை ஏற்றி வைத்து பதினெட்டு தடவை பாராயணம் செய்தால் தன விருத்தி கிட்டும். ஒன்பதாவது பௌர்ணமி அன்று அவல் பாயாசம் செய்து நைவேதிக்கலாம். அளவற்ற கீர்த்தியையும், தனத்தையும் தரும் இந்த பூஜையை விடாமல் செய்து வளம் பெறுங்கள்.
பாடல்கள்
தனம் தரும் வயிரவன் தளிரடி
பணிந்திடில் தளர்வுகள் தீர்ந்துவிடும்
வாழ்த்திடில் மகிழ்வுகள் வந்துவிடும்
சினம் தவிர்த்தன்னையின் சின்மய
புன்னகை சிந்தையில் ஏற்றவனே
தனக்கில்லை ஈடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்.
வாழ்வினில் வளம்தர வையகம் நடந்தான்
வாரியே வழங்கிடுவான்
தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட
தானென வந்திடுவான்
காழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நின்றான்
காவலாம் வந்திடுவான்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்.
முழு நிலவதனில் முறையோடு பூஜைகள்
முடித்திட அருளிடுவான்
உழுதவன் விதைப்பான் உடமைகள் காப்பான்
உயர்வுற செய்திடுவான்
முழு மலர் தாமரை மாலையை ஜெபித்து
முடியினில் கூடிடுவான்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்.
நான்மறை ஓதுவார் நடுவினில் இருப்பான்
நான்முகன் நானென்பான்
தேனினில் பழத்தை சேர்த்தவன் ருசிப்பான்
தேவைகள் நிறைந்திடுவான்
வான்மழையனவே வளங்களை அருள்வான்
வாழ்த்திட வாழ்ந்திடுவான்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்.