பிற உயிரிடம் அன்பு செய்திரு. அன்பே சிவம் என்று உணர்ந்திடு.
நீ எடுத்த இந்த உடல் நிலையற்றது ஆனால் இந்த உடல் கிடைக்க அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது.
ஏனென்றால் இந்த உடலில் இருந்து இன்ப, துன்பத்தை அனுபவித்து உன் ஆன்ம பக்குவ நிலையை அடைந்து பெரு நிலை அடைவதற்கு இந்த உடல் தேவை.
நீ எத்தனை பிறவிகளில் எத்தனை தாய் தந்தை உறவுகளையும் நண்பர்களையும், சத்ருகளையும் சந்தித்திருப்பாய். அது எதுவுமே இப்ப சிந்தை ஞாபகத்தில் இல்லை. அது போல் இப்பிறவியும் உன்னை கடந்து செல்லும். ஆதலால் நம் தமிழ் மொழியின் ஆழமான கலாச்சாரம், தர்மம், அறம், நேர்மை, ஞாயம், ஜீவகாருண்யம், அன்பே சிவம் உனக்குள் உன்னை தேடு, மெளனமாய் இரு, அடுத்த நிமிடம் கடந்து வரும் எல்லா நிலையிலும் அப்பனிடமே உள்ளது என்று நம்பு. உன்னை அவரிடம் சரணாகதி அடைந்து விடு. எல்லாம் அவரே வழிகாட்டுவார், காவலாய் காத்து உன்னை இப்பிறவியிலிருந்து அழைத்து செல்வார்.
உலகத்தின் முதல் உயிர்களும், தமிழ் மொழியும் தோன்றியது இத்தென்னாடு உடைய சிவனே. இத்தமிழகத்திலே நீயே முதல் தமிழ்ச் சங்கம் அமைத்துக் கொடுத்தாய். உன் செல்ல பிள்ளை முருகன் இரண்டாம் தமிழ்ச் சங்கம் தமிழனுக்கு விவசாயமும் தமிழ்மொழியின் எழுத்து நடையையும் தமிழனின் நாகரீக கலாச்சாரம் பரிணாம வளர்ச்சியும் அமைத்துக் கொடுத்தார். 18 சித்தர்களையும், 63 நாயன்மார்களையும், நால்வர்களையும் வைத்து இத்தமிழை வளர்த்தெடுத்தாய். அவ்வழியிலே வந்த இலங்கை மன்னன் இராவணேஸ்வரனும் ராஜராஜ சோழனும் இத்தமிழ் மக்களுக்காக நல்லாட்சி செய்திட்ட அடையாளமாய் காட்டியவனும் நீயே. அவ்வழியில் இத்திருக்கோயில் பின்வரும் தமிழ்ச் சமுதாயத்திற்கு இனிய தமிழின் தாய்தமிழ் மொழியாகவே அடையாளம் என்பதற்காகவும் இத்திருக்கோயிலும் இந்த புத்தகமும் ஒரு சான்று.
ஒவ்வொருவருக்கும் ஒரு ஈன்ற தாய் எப்படியோ அது போன்றே தமிழ்மொழியும், ஏனென்றால் வழிபாடு செய்யும் பொழுது தாய்மொழி மட்டுமே நேரடியாக அவளைப் பெற்ற தாய் தந்தையர் பேசிய மொழியே அப்பதிவுகள் அவன் உடலுக்குள் ஓடி ஓடி உட்கலந்த அந்த அணுவிற்குள் அணுவாய் இருக்கும். ஆதலால் தாய்தமிழ் வழிபாடு அவனை நேரடியாக அவன் இறை அணுவாகிய சிவத்துக்குள் சேர்த்திடுவான், உணர்ந்திடுவான். ஆனால், வேற்று மொழியிலிருந்து அவன் வழிபாடு படித்தால் அவன் புத்திக்கு சென்று மொழியாக்கம் செய்து உணர வேண்டும். அப்படி உணர்ந்தால் அவன் புத்தி வேலை செய்தால் ஆராய்ச்சிக்குள் உள்ளே சென்று ஞானம் அடைய முடியாது.
வேதத்தில் எந்த மொழியும் உயர்ந்தது, தாழ்ந்தது கிடையாது. சொன்னவர் ஸ்ரீ ராமானுஜர். அவன் அவன் மொழி அவனுக்கு பிடித்தது உயர்ந்தது. ஆதலால், இந்த புத்தகத்தின் வழியாக இப்பெருவுடையார் கோவிலின் ஒவ்வொரு தெய்வங்களின் விசேஷங்களிலும் செய்யப்படும் வழிபாடு, பாடல்களும் இலக்கண நடைமுறையில் இயற்றி அதற்கான விளக்க உரையும் கொடுத்துள்ளோம். அதை படித்து உணர்ந்து பாடினால் இறைபற்று, ஞானம் அடைந்து இறையை அடையலாம்.
இக்காலத்தில் இந்த பூமியில் ஏதோ ஒரு நாட்டில் பெரும் செல்வம் சம்பாதித்து வாழ்ந்தாலும், இத்தமிழ் மண்ணில் வாழ்ந்து தஞ்சை பெருவுடையார் கோவிலில் வழிபாடு செய்து இறையை அடைவதற்கு ஈடான செல்வம் கிடையாது. அதுவே உனக்கு செல்வம்.
இத்திருக்கோயிலில் நம் முன்னோர்கள் தமிழிலே வழிபாடு செய்து தமிழ் மந்திரம் ஓதி இப்பிரபஞ்சத்தின் சக்தியாகிய அதாவது அண்டம், பேரண்டம் சென்று ஆகாயத்தில் தொடர்பாகி எல்லா கோயிலையும் விட பெரிய கோயிலின் கோபுரம் ஆகாயத்தின் உயரத்திலிருந்து ஆகாயத்தை தொடர்பு செய்து சதாசிவத்தை தொடர்பு செய்து எல்லா ஈசனுக்கும் தலைமை ஈசனாக பெருவுடையார் இருக்கிறார். அந்த பெருமையை ஈன்று தந்த சிவபாதசேகரன் மாமன்னர் ராஜராஜசோழன் உடையார், உன் புகழ் வாழ்க! வாழ்கவே!! நாங்கள் எல்லோரும் உனக்கு நன்றிக் கடன் செய்கிறோம்.